மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிரான புகார்... ஜாய் கிரிஸில்டாவிடம் விசாரணை!

12 hours ago 3

Last Updated:September 22, 2025 12:18 PM IST

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக புகார் கொடுத்த ஜாய் கிரிஸில்டாவிடம் விசாரணை நடந்து வருகிறது.

 நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி பெயர் ஸ்ருதி. கடந்த சில காலமாகவே மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியிடம் இருந்து பிரிய போவதாகவும், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

 சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் ஆன புகைப்படத்தை சில வாரங்களுக்கு முன்பு ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா வெளியிட்டிருந்தார். திருமண புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த ஜாய் கிரிஸில்டா 6 மாத கர்ப்பமாக இருப்பதாக பதிவிட்டிருந்தார். தொடர்ந்து, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

 அப்போது பேசிய ஜாய் கிரிஸில்டா “மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி நான். என்னோட கணவர் ரங்கராஜ் என்னோட காண்டாக்ட்டில் இல்லை. என்னை ஏமாற்றிவிட்டார். எனக்கும் என் குழந்தைக்கும் நீதி வேண்டும். அவர் முதல் மனைவியோடு தொடர்பில் இருப்பது எனக்கு தெரியாது. கடந்த 1.5 ஆண்டுகளாக நாங்கள் திருமணம் செய்து ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தோம். நான் அவரோடு வாழணும்.

 என் குழந்தைக்கு அவர் தான் அப்பா. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். MRC நகரில் உள்ள திரிவேதியம்மன் கோவிலில் திருமணம் நடந்தது. சில தினங்களுக்கு முன் அவரை தனியார் நட்சத்திர விடுதியில் சந்தித்தேன். ஆனால் அவர் என்னுடன் பேசவில்லை. மீண்டும் நான் பேச முற்பட்டபோது அவர் என்னை பலர் முன்னிலையில் தாக்கினார்.

 அவர் என்னோடு சேர்ந்து வாழ சிலர் தடுக்கின்றனர். அது அவரது நண்பர்களாக இருக்கலாம், அவரது தம்பியாக கூட இருக்கலாம். ஸ்டார் ஹோட்டலில் ஒரு முறையும், பிரபல தனியார் தொலைக்காட்சி ஷூட்டிங் ஸ்பாட் என இரண்டு இடங்களில் வைத்து என்னை தாக்கினார். குழந்தை வேண்டாம் நீ மட்டும் போதும் என ரங்கராஜ் தெரிவித்தார்.” என தெரிவித்தார்.

 இந்த நிலையில், தன்னை பற்றி அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும், அவதூறாக பேசி வெளியிட்ட விடியோக்களை நீக்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மனு அளித்திருந்தார். இதேபோல், மாதம்பட்டி ரங்கராஜ் பங்குதாரராக இருக்கும் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்பு படுத்தி பேச ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக் கோரி, மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் வழக்கு தொடர்ந்திருந்தது.

 இதற்கிடையே, நடிகர் மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி எனக் கூறும் ஜாய் கிரிசில்டா சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாகவும் தாக்கியதாகவும் கூறி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்த நிலையில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

நெல்லையில் நாளை பவர் கட்.. உங்க பகுதியும் லிஸ்ட்ல இருக்கானு பாருங்க மக்கா

  • நெல்லையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

  • மின்சார சேவைகளுக்கான தகவல்களை TNPDCL செயலி மூலம் பெறலாம் என மின் பகிர்மான கழகம் அறிவுறுத்தியுள்ளது.

  • மின் தடை தொடர்பான தகவல்களுக்கு 9445859032, 9445859033, 9445859034 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article