Last Updated:September 22, 2025 3:24 PM IST
“பொதுமக்கள் சுதேசி பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என கூறும் பிரதமர் அவர்களே, நீங்கள் சுதேசி பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்குவீர்களா?" என ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
“பொதுமக்கள் சுதேசி பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என கூறும் பிரதமர் அவர்களே, நீங்கள் சுதேசி பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்குவீர்களா? தினமும் நீங்கள் சுற்றித் திரியப் பயன்படுத்தும் வெளிநாட்டு விமானத்தை விட்டுவிடுவீர்களா? நாள் முழுவதும் நீங்கள் பயன்படுத்தும் வெளிநாட்டுப் பொருட்களை விட்டுவிடுவீர்களா?” என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜிஎஸ்டி மறுசீரமைக்கப்பட்டு இன்று (22ஆம் தேதி) முதல் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து நேற்று (21ஆம் தேதி) நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, வருமான வரி குறைப்பு மூலம் முதல் பரிசு வழங்கியதாகவும், ஜிஎஸ்டி குறைப்பு மூலம் இரண்டாவது பரிசு வழங்கியுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
நவராத்திரி துவக்க நாளில் அமலுக்கு வரும் ஜிஎஸ்டி குறைப்பு மக்களின் சேமிப்பை அதிகரிக்கும். ஒரே நாடு, ஒரே வரி என்பது தற்போது முழுமை பெற்றுள்ளது. சாமானிய மக்கள் பயன்படுத்தும் 99% பொருட்கள் தற்போது 5% வரியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. பிரெட், பிஸ்கட் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையும், டிவி, ஸ்கூட்டர்களின் விலையும் குறையும் என்றும் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது பேச்சில், “'ஆத்மநிர்பர் பாரத்' மற்றும் சுதேசி பிரச்சாரத்தில் அனைத்து மாநில அரசுகளும் இணைய வேண்டும் என்றும், தங்கள் மாநிலங்களில் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் முதலீட்டிற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். நாடும் மாநிலங்களும் இணைந்து செயல்படும்போது, 'ஆத்மநிர்பர் பாரத்' கனவு நிறைவேறும்.
இன்று, தெரிந்தோ தெரியாமலோ, பல வெளிநாட்டுப் பொருட்கள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. நம் நாட்டு இளைஞர்களின் கடின உழைப்பை முதலீடாக செலுத்தி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை நாம் வாங்க வேண்டும். ஒவ்வொரு வீட்டையும் சுதேசியின் அடையாளமாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு கடையையும் சுதேசியால் அலங்கரிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில், “பொதுமக்கள் சுதேசி பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என கூறும் பிரதமர் அவர்களே, நீங்கள் சுதேசி பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்குவீர்களா? தினமும் நீங்கள் சுற்றித் திரியப் பயன்படுத்தும் வெளிநாட்டு விமானத்தை விட்டுவிடுவீர்களா? நாள் முழுவதும் நீங்கள் பயன்படுத்தும் வெளிநாட்டுப் பொருட்களை விட்டுவிடுவீர்களா?
प्रधान मंत्री जी, आप चाहते हैं कि जनता स्वदेशी इस्तेमाल करे।
आप ख़ुद स्वदेशी इस्तेमाल करना शुरू कीजिए? जिस विदेशी जहाज़ से रोज़ घूमते हैं, उसे छोड़ दीजिए? सारा दिन जितने विदेशी समान इस्तेमाल करते हैं, उन्हें छोड़ दीजिए।
आप भारत में काम कर रही चार अमेरिकी कंपनियों को बंद कर…
— Arvind Kejriwal (@ArvindKejriwal) September 22, 2025
இந்தியாவில் செயல்படும் நான்கு அமெரிக்க நிறுவனங்களை மூடுவீர்களா? டிரம்ப் ஒவ்வொரு நாளும் இந்தியாவையும் இந்தியர்களையும் அவமதித்து வருகிறார். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? மக்கள் தங்கள் பிரதமரிடமிருந்து எதிர்பார்ப்பது நடவடிக்கையே தவிர பிரசங்கங்கள் அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :
September 22, 2025 3:24 PM IST
மக்கள் எதிர்பார்ப்பது என்ன? – பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி