Cinema News
Published on September 22, 2025
kpy பாலா :
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் தான் பாலா. ஒவ்வொரு காமெடியனுக்கும் தனி ஸ்டைல் உண்டு அப்படி பாலாவின் ஸ்டைல் என்னவென்றால் தன்னுடைய கவுண்டர் பன்ச்சால் நகைச்சுவை செய்து அரங்கத்தில் இருப்பவரை சிரிக்க வைப்பார். இவரின் திறமையை கண்டறிந்த விஜய் டிவி தொடர்ந்து அனைத்து reality show-களிலும் வாய்ப்புகள் கொடுத்து வந்தது.
இதனால் பாலா வெகுஜன மக்களிடம் விரைவாக சென்றடைந்தார். அவர்களின் மனதில் இடம் பிடிப்பதற்காக முக்கிய காரணம் பாலா செய்து உதவிகள் தான். தனக்கு கிடைக்க கூடிய பணத்தை தனக்கென்று பயன்படுத்தாமல் ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து வருகிறார். இது ஒரு புறம் மக்களிடையே பாராட்டைப் பெற்று வந்தாலும் மறுபுறம் பாலாவுக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.
அவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது? சர்வதேச கைக்கூலியா? என பாலாவை கடந்த சில தினங்களாக அடித்து வருகின்றனர். இந்நிலையில் மூத்த பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பாலாவை அழிக்கத் துடிக்கும் கும்பலை பற்றி கூறியுள்ளார்.
தடை போட்ட சிவகார்த்திகேயன் :
அதில் ,”தனக்கு வரும் அவதூறுகளுக்கு பாலாவே பதில் சொல்லி இருக்கிறார். சிவகார்த்திகேயனுக்குப் பிறகு விஜய் டிவியில் இருந்து பல பிரபலங்கள் வந்துள்ளார்கள். ஆனால் அவர்கள் சினிமாவில் பெரிதாக வரவில்லை. பாலா நடித்த ’காந்தி கண்ணாடி’ படத்திற்கு இயற்கையாகவே boost கிடைத்தது. படம் நன்றாகவே இருந்தது. இருந்தாலும் அந்த படத்திற்கு screen பெரிதாக கிடைக்கவில்லை காரணம் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தான்.
வன்மத்திற்கான காரணம் :
பாலா சாதாரண டிவி ஆங்கராக இருந்து இவ்வளவு வளர்ந்தது யாருக்கும் பிடிக்கவில்லை. அது உச்சகட்ட வன்மம். பொறாமை தான் காரணம். அந்த மாதிரியான பொறாமை எல்லாம் பாலாவிடம் எடுபடாது. என்னைப் பொறுத்தவரை பாலா எந்த பத்திரிகைக்காரணையும் கவனிக்கவில்லை. சில பேர் பாலா என்னை கவனிக்கவில்லை எனக்கு பணம் கொடுக்கவில்லை என்று அவரைப் பற்றி அவதூறு பரப்பிருக்கலாம். அவர்கள் எல்லாம் உண்மையான மீடியாக்காரர்கள் கிடையாது. என்று கூறியுள்ளார்.
சதீஷ் பி.இ. பட்டதாரியான இவர் 3 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 2 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
More in Cinema News
-
Cinema News
Rajinikanth: நடிகர் சங்கத்துக்கு ஒத்த பைசா கொடுக்காத ரஜினி!.. கிழிக்கும் பிரபலம்!…
By சிவாSeptember 22, 2025
கோலிவுட்டுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் பல வருடங்களாகவே செயல்பட்டு வருகிறது. இதில் நடிகர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள், இந்த சங்கத்திற்கு எம்ஜிஆர், சிவாஜி,...
-
Cinema News
Dhanush: இந்த மனுஷனுக்கு டிஏஜிங்கே தேவையில்லை.. 13 வருஷமா மாறாத தனுஷ்
By RohiniSeptember 22, 2025
பிறவிக்கலைஞன்: தமிழ் சினிமாவில் ஒரு போற்றப்படும் நடிகராக திகழப்படுபவர் நடிகர் தனுஷ். இவருடைய அப்பா ஒரு இயக்குனர், அண்ணனும் ஒரு இயக்குனராக...
-
Cinema News
யுடியூபர்ஸ அழிச்சிட்டா உங்க மொக்க படம் ஓடிடும்!.. வடிவேலுவுக்கு புளூசட்டமாறன் பதிலடி!…
By சிவாSeptember 22, 2025
யுடியூப்பில் விமர்சனம்: ரசிகர்களின் கையில் எப்போது ஸ்மார்ட்போன் வந்து அதில் youtube எல்லோரிடமும் பிரபலமானதோ, அப்போது முதலே அதில் நிறைய சாதக,...
-
Cinema News
எவ்வளவு முட்டு கொடுத்தாலும் நடக்காது.. ஓடிக்கிட்டே இருப்பேன்.. ஹேட்டர்ஸ்க்கு kpy பாலா பதிலடி
kpy பாலா : விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு காமெடி ஷோவின் season 6 winner தான் கேபிஒய் பாலா. தனது...
-
Cinema News
ஆடுனது தப்பா? ரோபோ சங்கர் மனைவியின் கட்டுக்கடங்காத துக்கத்தை சொன்ன அறந்தாங்கி நிஷா
காமெடி மன்னன் ரோபோ : விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ரோபோ...