Cinema News
Published on September 22, 2025
kpy bala :
விஜய் டிவியில் அதிக டிஆர்பி கொண்ட கலக்கப்போவது யாரு காமெடி ஷோவின், சீசன் 6 டைட்டில் வின்னர் தான் பாலா. இவருக்கு ’பன்ச் பாலா’ என்ற பெயரும் இருக்கிறது. கவுண்டர் அட்டாக் செய்து காமெடி பன்ச்சால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்.
விஜய் டிவியின் எல்லா நிகழ்ச்சிகளிலும் பாலாவை பயன்படுத்த தொடங்கி விட்டனர். அந்த அளவிற்கு பாலா தனது தனித்திறமையினால் உயர்ந்திருந்தார். தொடர்ந்து தன்னுடைய பாணியில் கலக்கிக் கொண்டிருந்த பாலாவுக்கு அவர் எதிர்பார்த்தது போலவே வெள்ளித்திரியிலும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் சேதுபதியின் ஜூங்கா படத்தில்ஒரு காமெடியனாக தனது கிடைக்கப்பெற்ற வாய்ப்பை பயன்படுத்தினார்.
வெள்ளித்திரையில் ஹீரோ :
அதன் பிறகு தற்போது பாலா ’காந்தி கண்ணாடி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். ஒரு வழியாக பாலாவின் நீண்ட நாள் கனவான ஹீரோ ஆக வேண்டும் என்ற ஆசை இந்த படத்தின் மூலம் நிறைவேறியது. பாலா ஆங்கரிங், டிவி நிகழ்ச்சி, வெளிநாடுகளில் ஷோ என்று தனக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளினால் வரும் பணத்தை தனக்கென்று செலவழிக்காமல் ஏழை எளிய மக்களுக்கு அள்ளிக் கொடுத்து கலியுக கர்ணனாக வலம் வருகிறார்.
கலியுக கர்ணன் :
இன்று தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நடிகர்கள் கூட இப்படி அடுத்தவர்களுக்காக செலவு செய்ய மாட்டார்கள். ஆனால் பாலா ஓடி ஓடி தேடி தேடி சென்று உதவி செய்கிறார். இந்நிலையில் பாலா இவ்வளவு உதவிகளை செய்கிறாரே அவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? யாரால் கொடுக்கப்பட்டது? இன்று பல விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லை பின்னாடி சர்வதேச சதிகாரர்களின் வேலை நடக்கிறது என்று சமீபத்தில் புரளி எழுந்தது.
பாலா வேதனை :
இந்த சம்பவம் பாலாவை மிகவும் கவலைக்கிடம் ஆக்கியது. இதைப் பற்றி பாலா கூறுகையில்,” நான் சம்பாதித்த பணத்தில் அடுக்குமாடி வீடு அல்லது ஆடம்பர கார் வாங்கி இருந்தால் கூட என்னை யாரும் கேள்வி கேட்டிருக்க மாட்டார்கள். அந்த பணத்தில் சிறிய உதவியும் சிறிய கிளினிக் கட்ட முடிவெடுத்தேன். அதுதான் தற்போது இவ்வளவு பிரச்சனைக்கு காரணமாக இருக்கிறது”. என்று பாலா கவலையுடன் தெரிவித்தார்.
இந்த உலகத்தில் நல்லது செய்ய வேண்டுமென்றால் ஒருத்தரும் வர மாட்டார்கள் அல்லது அதை ஆச்சரியத்தோடு ஏதோ அதிசயம் போல் பார்ப்பார்கள். ஆனால் அதை தடுப்பதற்கு ஒரு கூட்டத்தோடு ஓடி வருவார்கள். தானும் படுக்க மாட்டான். தள்ளியும் படுக்க மாட்டான் அந்த கதை தான் தற்போது பாலாவுக்கு நடக்கிறது.
சதீஷ் பி.இ. பட்டதாரியான இவர் 3 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 2 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
More in Cinema News
-
Cinema News
குஷியில் அதை இதுவரைக்கும் யாரும் கண்டுபிடிக்கல.. ஆட்டைய போட்ட மேட்டரை அவுத்து விட்ட எஸ் ஜே சூர்யா..
குஷி ரீ-ரிலீஸ் : தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் திரைப்படங்கள் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. தற்போது இந்த...
-
Cinema News
மொத்த பட வசூலை சேர்த்தாலும் புஷ்பா 2 கலெக்ஷன் வரலயே!.. டோலிவுட்டுக்கு என்னாச்சி?..
By சிவாSeptember 22, 2025
முன்பெல்லாம் அதிக வசூல் என்பது ஹிந்தி மற்றும் தமிழ் படங்களிலேயே அதிகமாக இருந்தது. ஆனால் எப்போது பாகுபலி வந்ததோ அப்போது முதலே...
-
Cinema News
Jananayagan: தீபாவளிக்கு செம ட்ரீட் வைக்கும் தளபதி!.. விஜய் ஃபேன்ஸ் ரெடியா இருங்க!..
By சிவாSeptember 22, 2025
அரசியல்வாதியாக மாறிய விஜய்: இப்போதெல்லாம் நடிகர் விஜய் பற்றிய அப்டேட் என்றாலே அது அவரின் அரசியல் தொடர்பான செய்தியாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில்...
-
Cinema News
விஜய் வாய தொறந்தாலே பொய்தான்.. ஊர சுத்தி ஏமாத்திட்டு இருக்காரு.. வெளுத்து வாங்கிய பிரபலம்
தவெக தலைவர் விஜய் : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்காக முனைப்போடு...
-
Cinema News
கூலியால் கடுப்பான கார்த்தி… கைவிடப்படுகிறதா கைதி2? எல்.சி.யூ-க்கு எண்ட் கார்டு போட்டாச்சி!..
Kaithi2: கார்த்தி நடிப்பில் இரண்டாம் பாகமாக உருவாக இருந்த கைதி2 தற்போது ஆட்டம் கண்டு இருப்பதாகவும் இதனால் எல்சியூ நிலைமை கவலைக்கிடமாக...