Last Updated:September 19, 2025 5:40 PM IST
அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி மற்றும் இந்தியாவுக்கு நெருக்கமானவர் என தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், தான் இந்தியாவுக்கு நெருக்கமானவர் என்றும், பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமானவர் என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.
இந்திய இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீதம் வரி விதித்தது இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரதமர் மோடியை அடிக்கடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டி பேசிவந்தார். இச்சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளுக்கு தொலைபேசி வாயிலாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் டிரம்ப் வாழ்த்து தெரித்தார்.
அதில் பிரதமர் மோடி சிறப்பாக பணியாற்றி வருவதாகவும், ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ஒத்துழைப்பு வழங்கும் அவருக்கு நன்றி கூறுவதாக கூறியிருந்தார். இந்நிலையில் இங்கிலாந்து சென்றுள்ள டிரம்ப் அந்நாட்டு பிரதமர் ஸ்டார்மருடன் செய்தியாளர்களை சந்தித்தபோது, ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரவே இந்தியா மீதான வரியை உயர்த்தியதாக கூறினார்.
மேலும் கச்ச்சா எண்ணெய் விலை குறைந்தால் ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். அதில் முக்கியமாக அமெரிக்க அதிபர் டிரம்ப், தான் இந்தியாவுக்கு நெருக்கமானவர் என்றும், பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமானவர் என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.
புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :
September 19, 2025 5:40 PM IST
“நான் இந்தியாவுக்கும், மோடிக்கும் நெருக்கமானவன்..” அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேச்சு!