Last Updated:September 03, 2025 6:23 PM IST
பெரிய ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்ஃபோன்கள் நம்மில் பெரும்பாலானோரின் பாக்கெட்டுகள் மற்றும் கைகளில் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலத்தில்கூட, சிறிய அம்ச தொலைபேசிகள் (compact feature phones) இன்னும் பலர் மத்தியில் பிரபலமாக உள்ளன.

ஆப்பிள் முதல் சாம்சங் வரையிலான பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிய ஸ்கிரீன்கள் மற்றும் சிறந்த வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்க போட்டியிடும் அதே வேளையில், மொபைல் போன்கள் முடிந்தவரை சிறியதாகவும், எடை குறைவாகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது.
தற்போதும் கூட, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மொபைல் யூஸர்கள் இதுபோன்ற மினி மொபைல்களை அவற்றின் போர்ட்டெபிலிட்டி, எளிமை மற்றும் வழக்கத்திற்கு மாறான வசீகரத்திற்காக தொடர்ந்து ஏற்றுக் கொள்கிறார்கள். அவை சிறிய ஃபிரேம்களை கொண்டிருந்த போதிலும், இந்த டிவைஸ்களில் பல கால்ஸ், மெசேஜ் அனுப்புதல், கேமராக்கள் மற்றும் இன்டர்நெட் அக்சஸ் போன்ற ஆச்சரியமான அம்சங்களையும் கொண்டுள்ளன. அந்த வகையில் உலகின் 5 சிறிய மொபைல் போன்கள் பற்றி பார்க்கலாம். இவை மிகச் சிறியவை, இவற்றை ஒரு தீப்பெட்டிக்குள் கூட வைக்க முடியும். உலகின் மிகச் சிறிய, ஆனால் மிகவும் கவர்ச்சிகரமான ஐந்து மொபைல் போன்களைப் பாருங்கள்.
ஜான்கோ டைனி டி1 (Zanco Tiny T1): உலகின் மிகச்சிறிய மொபைல் என்று அழைக்கப்படும் Zanco Tiny T1, 46.7 மி.மீ. நீளம் மட்டுமே கொண்டது மற்றும் வெறும் 13 கிராம் எடை உள்ளது. இந்த சிறிய மொபைல் வெறும் 0.49-இன்ச் ஓஎல்இடி ஸ்கிரீன் கொண்டுள்ளது, 2ஜி நெட்வொர்க் சப்போர்ட் மற்றும் 300 தொடர்புகளை சேமித்து வைப்பதற்கான ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது.
ஜான்கோ டைனி டி2 (Zanco Tiny T2): இது மேலே பார்த்த T1 மொபைலின் அப்டேட்டட் வெர்ஷன் ஆகும். 3G சப்போர்ட், ஒரு கேமரா, 128MB ரேம் மற்றும் 64MB இன்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இது வெறும் 31 கிராம் எடையுள்ளது, மேலும் இது ஏழு நாட்கள் வரை பேட்டரி ஆயுளை வழங்குகிறது. குறிப்பாக யூஸர்கள் இந்த மினியேச்சர் மொபைலில் மியூசிக் கேட்கலாம், வீடியோக்களைப் பார்க்கலாம் மற்றும் பேஸிக் கேம்ஸ்களை விளையாடலாம்.
யுனிஹெர்ட்ஸ் ஜெல்லி 2 (Unihertz Jelly 2): இது உலகின் மிகச்சிறிய 4G ஸ்மார்ட்ஃபோன் என்று கூறப்படுகிறது. இது 3-இன்ச் ஸ்கிரீனுடன் மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11-ல் இயங்கும் இந்த சிறிய மொபைல் 6GB ரேம், 128GB ஸ்டோரேஜ், ஃபேஸ் அன்லாக், ஜிபிஎஸ், கேமரா, வைஃபை மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் அக்சஸூடன் வருகிறது. 110 கிராம் மட்டுமே எடையுள்ள இந்த மொபைல் கைகளில் இருக்கும்போது மிக சிறியதாகத் தெரிந்தாலும், முழுமையான ஒரு ஸ்மார்ட்ஃபோன் போல வேலை செய்கிறது.
லைட் ஃபோன் 2 (Light Phone 2): டிஜிட்டல் கவனச் சிதறல்களிலிருந்து விடுபட விரும்புவோருக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், இது இ-இங்க் டிஸ்ப்ளே மற்றும் 4G கனெக்டிவிட்டி, கால்ஸ் மற்றும் மெசேஜ்கள் போன்ற அத்தியாவசிய செயல்பாடுகளை மட்டுமே சப்போர்ட் செய்கிறது. சோஷியல் மீடியாக்கள், கேம்ஸ் அல்லது ஆப்ஸ்கள் இல்லாத இந்த மொபைல் பிரீமியம் வடிவமைப்பு, சிறிய அளவு மற்றும் நீண்ட பேட்டரி ஆயுளை வழங்குகிறது.
கியோசெரா கேஒய்-01 எல் (Kyocera KY-01L): உலகின் மிக மெல்லிய மொபைல் என்று அழைக்கப்படும் இது வெறும் 5.3 மி.மீ. தடிமன் மற்றும் 47 கிராம் எடை கொண்டது. இதில் இருக்கும் 2.8-இன்ச் மோனோக்ரோம் ஸ்கிரீனானது கால்ஸ், மெசேஜ்கள் மற்றும் பிரவுசிங் செய்ய யூஸர்களை அனுமதிக்கிறது. ஜப்பானில் பிரபலமானது, இந்த தொலைபேசியின் நேர்த்தியான வடிவமைப்பு கிரெடிட் கார்டை ஒத்திருக்கிறது, இது ஸ்டைலானதாகவும் இருக்கிறது.

சென்னையில் நாளை (செப்.13) முக்கிய பகுதிகளில் மின்வெட்டு?
சென்னையில் நாளை (13.09.2025) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்தடை
அடையாறு, பெசன்ட் நகர், சாஸ்திரி நகர் பகுதிகளில் மின்தடை ஏற்படும் - மின்வாரியம்
பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்