``தடைகளும், வரிகளும் பிரச்னையை தீர்க்காது, மேலும் மோசமாக்கும்'' - ட்ரம்புக்கு சீனா பதிலடி

1 week ago 4

ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த, சீனாவுக்கு 50% வரி விதிக்க வேண்டும் என்று ட்ரம்ப் நேட்டோ நாடுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த தடைகளும், வரிகளும் பிரச்னையை மோசமாக்கும் என சீனா எச்சரித்துள்ளது.

Published:14 Sep 2025 4 PMUpdated:14 Sep 2025 4 PM

புதின் - ஜின்பிங்

புதின் - ஜின்பிங்

"ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த, நேட்டோ நாடுகள் சீனா மீது 50 - 60 சதவிகித வரி விதிக்க வேண்டும். நேட்டோ நாடுகள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது. ரஷ்யா மீது வரி விதிக்க வேண்டும்" என்று நேற்று ட்ரம்ப் நேட்டோ நாடுகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ட்ரம்ப்

ட்ரம்ப்

சீனாவின் பதிலடி

இதற்கு பதிலடி தரும் விதமாக, நிகழ்ச்சி ஒன்றில், சீனா வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, "சீனா அமைதியை நிலைநாட்டுவதிலும், முக்கிய பிரச்னைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதிலும் முனைப்பாக இருக்கிறது.

போர் எந்தப் பிரச்னையையும் தீர்க்காது. தடைகளும், வரிகளும் பிரச்னைகளை இன்னும் மோசமாக்கும்" என்று பேசியுள்ளார்.

நடவடிக்கை எடுக்காத அமெரிக்கா

ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக ரஷ்யா மீது எந்தவொரு வரியையும் இன்னும் அமெரிக்கா விதிக்கவில்லை.

மேலே குறிப்பிட்டுள்ள கடிதத்தில் கூட, நேட்டோ நாடுகள் ரஷ்யா, சீனா மீது வரியை விதித்தால் தான், அமெரிக்கா விதிக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ட்ரம்பின் இந்தக் கடிதத்திற்கு நேட்டோ நாடுகள் எப்படி பதிலளிக்க உள்ளதோ?

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Read Entire Article