Last Updated:September 19, 2025 1:26 PM IST
மூளை வளர்ச்சிக்கும், நினைவாற்றலை மேம்படுத்துவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் பாதாம் பங்களிக்கிறது. இரவு முழுவதும் ஊறவைத்த பாதாமை பாலில் கலந்து குடிப்பது ஊட்டச்சத்து நிபுணர்களாலும் ஆயுர்வேதத்தாலும் அங்கீகரிக்கப்பட்ட முறையாகும்.
குழந்தைகளுக்கு பிடித்தமான உணவுகளில் ஒன்று பசும்பால். பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பாலில், சில இயற்கை பொருட்களை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும்போது, அவர்களின் உணவுமுறைகள் ஆரோக்கியமானதாகவும், மிகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்று குழந்தை உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குழந்தைகளின் ஊட்டச்சத்தை அதிகரிக்க பாலில் சேர்க்க வேண்டிய 5 பொருட்களை இப்போது தெரிந்துகொள்ளலாம்.
பல தலைமுறைகளாக குழந்தைகளுக்கு முழுமையான உணவாகப் பால் கருதப்படுகிறது. அதற்கு காரணம் பாலில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இந்நிலையில் பாலுடன் சில இயற்கை பொருட்களை சேர்த்தால், உடல் மற்றும் அறிவுசார் வளர்ச்சிக்கு கூடுதல் ஊட்டச்சத்தை வழங்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தினமும் உலர் பழங்கள் மற்றும் காய்கறிகளை பாலுடன் கலப்பதன் மூலம், குழந்தைகள் சீரான அளவு வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலைப் பெறுவதை உறுதி செய்ய முடியும்.
அதில் ஒன்றுதான் பேரீச்சம்பழம். புரதம், வைட்டமின் பி16 மற்றும் இரும்புச்சத்து நிறைந்த பேரீச்சம்பழம் எலும்புகளை வலுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், இரத்த சோகையைத் தடுக்கவும் உதவுகிறது. இரவு முழுவதும் பேரீச்சம்பழத்தை ஊறவைத்து, காலையில் பாலுடன் கலந்து சாப்பிடுவது சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஊட்டச்சத்து உறிஞ்சுதலையும் மேம்படுத்துகிறது.
இதேபோல், உலர் திராட்சையும் மூளை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று பரவலாகக் கருதப்படுகிறது. பாலில் ஊறவைத்த உலர் திராட்சையை சேர்க்கும்போது, அவை நினைவாற்றலைக் கூர்மைப்படுத்தவும், மூளை செல் வளர்ச்சியை ஆதரிக்கவும், மன வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகின்றன. குழந்தைகள், உலர் திராட்சை கலந்த பாலின் இயற்கையான இனிப்பை மிகவும் விரும்புவார்கள் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் ஆற்றல் மிக்கதாக விவரிக்கப்படும் அத்திப்பழங்கள், செரிமானத்திற்கு உதவுவதோடு, உள் சக்தியையும் உருவாக்குகின்றன. அவற்றின் இயற்கையான இனிப்பைக் கருத்தில் கொண்டு, சர்க்கரை சேர்க்காமல் பாலில் இதை கலந்து கொடுக்கும் போது குழந்தைகள் விருப்பத்தோடு பருகுகிறார்கள்.
அனைவருக்கும் பிடித்தமான பாதாமில் புரதம் மற்றும் வைட்டமின் ஈ சத்து நிறைந்துள்ளது. மூளை வளர்ச்சிக்கும், நினைவாற்றலை மேம்படுத்துவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் பாதாம் பங்களிக்கிறது. இரவு முழுவதும் ஊறவைத்த பாதாமை பாலில் கலந்து குடிப்பது ஊட்டச்சத்து நிபுணர்களாலும் ஆயுர்வேதத்தாலும் அங்கீகரிக்கப்பட்ட முறையாகும்.
வழக்கமாக கேரட்டை பொரியல், சாலட் ஆகியவற்றுக்கு பயன்படுத்துவோமே தவிர பாலில் சேர்ப்பதை யோசித்திருக்க கூட மாட்டோம். பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த கேரட்டை, அரைத்து கொதிக்க வைத்து பாலில் சேர்த்து காலையில் பருகும் போது கண், முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உதவுவதாக கூறப்படுகிறது, அதே நேரத்தில் குழந்தைகளின் ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கும் இது உதவுகிறது.
நியூஸ்18 தமிழின் லைஃப்ஸ்டைல் கேட்டகிரியானது, உடல்நலம், உணவு, டிராவல், ஃபேஷன், சமையல் குறிப்புகள் மற்றும் பலவற்றைப் பற்றிய சமீபத்திய தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது.
First Published :
September 19, 2025 1:26 PM IST