வீட்டின் உரிமையாளர்கள் தரப்பில், தங்கள் வீட்டின் தனித்துவத்தைப் பாதுகாக்கவே இதுபோன்ற கடுமையான விதிகள் விதிக்கப்பட்டுள்ளதாக வாதிடுகின்றனர்.
Published:Yesterday at 7 PMUpdated:Yesterday at 7 PM
அமெரிக்காவின் புகழ்பெற்ற 'கண்ணுக்குத் தெரியாத வீட்டில்' (Invisible House) தங்கியிருந்த இன்ஃப்ளூயன்சர் ஒருவருக்கு செல்ஃபி எடுத்ததற்காக சுமார் 8.7 லட்சம் ரூபாய் ($10,000) அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவின் ஜோஷுவா ட்ரீ தேசியப் பூங்காவில் அமைந்துள்ள இந்த 'கண்ணுக்குத் தெரியாத வீடு' அதன் தனித்துவத்திற்காக பெயர்பெற்றது.
பாலைவனச் சூழலுடன் ஒன்றிணைந்து, கண்ணுக்குப் புலப்படாதது போன்ற தோற்றத்தை அளிப்பதால் இது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். ஒரு இரவு தங்குவதற்கு இதன் வாடகை சுமார் $2,400 (சுமார் 2.1 லட்சம் ரூபாய்) ஆகும்.
இந்த நிலையில் டேவிஸ் என்ற இன்ஃப்ளூயன்சர் இந்த வீட்டில் தங்கியுள்ளார். அப்போது அவரது நண்பரின் காதலி வீட்டின் குளியலறையில் ஒரு செல்ஃபி எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதற்கு வீட்டின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர்களின் வீட்டை முன் அனுமதியின்றி வர்த்தக நோக்கங்களுக்காக புகைப்படம் எடுக்கக் கூடாது என்பது அவர்களின் முக்கிய விதியாகும். இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட செல்ஃபியை அவர்கள் விளம்பர நோக்கம் கொண்டதாகக் கருதி, டேவிஸின் பில்லில் $10,000 அபராதமாகச் சேர்த்துள்ளனர்.
வீட்டின் உரிமையாளர்கள் தரப்பில், தங்கள் வீட்டின் தனித்துவத்தைப் பாதுகாக்கவே இதுபோன்ற கடுமையான விதிகள் விதிக்கப்பட்டுள்ளதாக வாதிடுகின்றனர். ஆனால் விருந்தினர் தரப்பில் அது ஒரு தன்னிச்சையான தனிப்பட்ட புகைப்படம் என்றும், எந்த பிராண்டையும் விளம்பரப்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் கூறியிருக்கின்றனர்.
invisible housePC: forbes
கண்ணாடி வீடு ஏன் பிரபலம்
இந்த வீட்டின் வெளிப்புறம் முழுவதும் கண்ணாடியால் ஆனது. அதனால், சுற்றியுள்ள பாலைவனத்தின் தோற்றத்தை அப்படியே பிரதிபலிக்கும். தூரத்தில் இருந்து பார்க்கும்போது, அந்த இடத்தில் ஒரு வீடே இல்லாதது போலத் தெரியும். அதனால்தான் இதற்கு 'கண்ணுக்குத் தெரியாத வீடு' என்று பெயர். இது ஒரு விடுமுறை விடுதி போல செயல்படுகிறது. சினிமா பிரபலங்கள், நடிகர்கள் என பலர் இங்கு வந்து தங்குகின்றனர். சினிமா மற்றும் விளம்பரப் படப்பிடிப்புகளுக்கும் இந்த வீட்டை வாடகைக்கு விடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!