ஏ.சி., எல்இடி பல்பு தயாரிப்பாளர்களுக்கு பிஎல்ஐ ஊக்கத் தொகை திட்டத்துக்கு விண்ணப்ப பதிவு மீண்டும் தொடக்கம்

1 week ago 5

Last Updated : 15 Sep, 2025 08:54 AM

Published : 15 Sep 2025 08:54 AM
Last Updated : 15 Sep 2025 08:54 AM

<?php // } ?>

புதுடெல்லி: ஏ.சி., எல்​இடி பல்பு உள்​ளிட்ட பொருட்​கள் தயாரிப்​பாளர்​களுக்கு உற்​பத்​தி​யுடன் இணைந்த ஊக்​கத் தொகை திட்டத்துக்​கான விண்​ணப்ப பதிவு மீண்​டும் இன்று தொடங்​கு​கிறது. ஏ.சி., எல்​இடி பல்பு உள்​ளிட்ட பொருட்​கள் (ஒயிட் பொருட்​கள்) தயாரிப்​பாளர்​களுக்கு உற்​பத்​தி​யுடன் இணைந்த ஊக்​கத் தொகை (பிஎல்ஐ) திட்​டத்​துக்கு மத்​திய அமைச்​சரவை கடந்த 2021-ம் ஆண்டு ஏப்​ரல் 7-ம் தேதி ஒப்​புதல் வழங்​கியது. ஏப்​ரல் 16-ம் தேதி இதற்​கான முறை​யான அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டது.

உள்​நாட்டு உற்​பத்​தியை ஊக்​குவிக்​க​வும் அதிக அளவில் இத்​துறை​யில் முதலீட்டை ஈர்க்​க​வும் இந்த திட்​டம் கொண்​டு​வரப்​பட்​டது. ரூ.6,238 கோடி​யில் 7 ஆண்​டு​களுக்கு இந்த திட்​டம் அமலில் இருக்​கும் என அறிவிக்​கப்​பட்​டது. இதற்​கான விண்​ணப்​பப் பதிவு 3 சுற்​றுகளாக நடை​பெற்​றது. இது​வரை இந்த திட்​டத்​துக்​காக 83 விண்​ணப்​ப​தா​ரர்​கள் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இந்​நிலை​யில், மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில் துறை அமைச்​சகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், “ஏ.சி., எல்​இடி பல்பு உள்​ளிட்ட பொருட்​கள் தயாரிப்​பாளர்​கள் பிஎல்ஐ திட்​டத்​துக்​கான 4-வது சுற்று விண்​ணப்ப பதிவு திங்​கள்​கிழமை (இன்​று) மீண்​டும் தொடங்​கு​கிறது. இந்த திட்​டத்​தின் கீழ் அதிக முதலீடு செய்ய தொழில் துறை​யினர் விரும்​புவ​தால் விண்​ணப்​பப் பதிவு மீண்​டும் திறக்​கப்​படு​கிறது. அடுத்த 30 நாட்​களுக்கு (அக்​டோபர் 14) விண்​ணப்​பிக்​கலாம்" என கூறப்​பட்​டுள்​ளது.

சுய​சார்பு இந்​தியா திட்​டத்தை ஊக்​குவிக்க செல்​போன், மின்​னணு சாதன உற்​பத்தி உட்பட மொத்​தம் 14 துறை​களுக்கு பிஎல்ஐ திட்​டம் செயல்​படுத்​தப்​படு​கிறது. துறை வாரி​யான குறை​களை நீக்​குதல், பெரு​மளவு உற்​பத்தி வாய்ப்​பு​களை உரு​வாக்​குதல், ஏற்​றும​தியை அதி​கரித்​தல் மற்​றும் வேலை வாய்ப்​பு​களை உரு​வாக்​குதல் ஆகிய​வை​தான் பிஎல்ஐ திட்​டத்​தின் நோக்​கம் ஆகும். இந்த திட்​டத்​தின் மூலம் ரூ.1.9 லட்​சம் கோடி முதலீடு ஈர்க்​கப்​பட்​டுள்​ளது. இதனால் ரூ.17 லட்​சம் கோடி அளவுக்கு உற்​பத்தி அதி​கரித்து 12.3 லட்​சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்​துள்​ளது.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...

Follow

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

Read Entire Article