Last Updated:September 13, 2025 8:58 AM IST
Albania appoints AI minister Diella | ஊழலை ஒழிக்கும் பணியின் ஒரு பகுதியக உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சர் டியெல்லாவை (Diella) நியமித்துள்ளது அல்பேனியா நாடு.
ஊழலை ஒழிக்கும் முயற்சியாக, உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சரை நியமித்து அல்பேனியா நாடு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
உலகின் அனைத்து துறைகளிலும் வேகமாகப் பரவி வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தற்போது அரசியல் களத்திலும் நுழைந்துள்ளது.
அந்த வகையில் டியெல்லா என்ற பெயரில் உலகின் முதல் ஏஐ அமைச்சரை நியமித்துள்ளதாக அல்பெனியா நாட்டின் பிரதமர் எடி ராமா அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து பேசிய பிரதமர் எடி ராமா, இந்த செயற்கை நுண்ணறிவு அமைச்சரானது, டெண்டரை இறுதி செய்வதில் தொடங்கி, பல்வேறு பணிகளை பார்க்கும் என்றும் இதன்மூலம் லஞ்சம், ஊழல், முறைகேடுகளை முழுமையாக ஒழிக்க முடியும் என தான் நம்புவதாகவும் கூறினார்.
Albania has become the first country in the world to have an AI minister – not an AI minister, but a virtual minister made of pixels and code and powered by artificial intelligence. Her name is "Diella", which means sunshine in Albanian, and she will be responsible for all public… pic.twitter.com/SwdjUogAGs
— Deg (@d_e_gX) September 11, 2025
பாரம்பரிய அல்பேனிய உடை அணிந்து டிஜிட்டல் அவதாரமாக இருக்கும் டியெல்லா ஏற்கனவே, அந்நாட்டின் ‘இ-அல்பேனியா’ தளத்தில் பொதுமக்களுக்கு ஆவணங்கள் தொடர்பான உதவிகளைச் செய்யும் ஆன்லைன் உதவியாளராக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :
September 13, 2025 8:48 AM IST