உடன்குடி அனல்மின் நிலையத்தில் சோதனை மின்னுற்பத்தி தொடக்கம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

6 days ago 3
கோப்புப்படம்
<?php // } ?>

சென்னை: உடன்​குடி அனல்​மின் நிலை​யத்​தில் சோதனை மின்​னுற்​பத்தி தொடங்​கப்​பட்​டுள்​ள​தாக, மின்​வாரிய அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

துாத்​துக்​குடி மாவட்​டம், உடன்​குடி​யில் தலா, 660 மெகா​வாட் திறனில், இரண்டு அலகு​கள் உடைய அனல்​மின் நிலை​யத்​தை, ரூ.13,076 கோடி​யில் மின்​வாரி​யம் அமைத்து வரு​கிறது. 2012-ம் ஆண்டு திட்​டம் அறிவிக்​கப்​பட்ட நிலை​யில். கட்​டு​மான பணி​கள், கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்​பட்டது. உடன்​குடி மின்​நிலை​யத்​துக்கு நிலக்​கரி எடுத்து வரு​வதற்​காக, உடன்​குடி கடற்​கரை​யில் இருந்து கடலில், 5 கி.மீ., துாரத்​துக்கு நிலக்​கரி முனை​யம் அமைக்​கப்​பட்டு உள்​ளது.

மின்​நிலை​யத்​தின் கட்​டு​மான பணி​களை, மத்​திய அரசின் பிஎச்​இஎல் நிறு​வனம் மேற்​கொள்​கிறது. 2021 - 22ம் ஆண்​டில் மின்​னுற்​பத்தி தொடங்க திட்​ட​மிடப்​பட்​டது. ஆனால், கட்​டு​மான பணி​கள் முடிக்​கப்​ப​டாத​தால் திட்​ட​மிட்​டபடி மின்​னுற்​பத்​தியை தொடங்க முடி​யாத நிலை ஏற்​பட்​டது. இந் நிலை​யில், கடந்த 11-ம் தேதி உடன்​குடி மின்​நிலை​யத்​தின் முதல் அலகில், சோதனை மின்​னுற்​பத்தி துவங்​கி​யுள்​ளது. அப்​போது, 87 மெகா​வாட் மின்​னுற்​பத்தி செய்​யப்​பட்​டது. இந்த மின்​சா​ரம், மின் கட்​டமைப்​பில் சேர்க்​கப்​பட்​டது.

இதுகுறித்​து, மின்வாரிய அதி​காரி​கள் கூறிய​தாவது: உடன்​குடி அனல்​மின் நிலை​யத்​தின் முதல் அலகில் பல தொழில்​நுட்ப சவால்​களை கடந்​து, தொடர் முயற்​சி​யின் காரண​மாக சோதனை மின்​னுற்​பத்தி தொடங்​கப்பட்​டுள்​ளது. முன்​ன​தாக, சோதனை செய்த போது 10 தொழில்​நுட்ப இடர் பாடு​கள் கண்​டறியப்​பட்​டு, அவை சரி செய்​யப்​பட்​டது. தற்​போது, கனரக உலை எண்​ணெய் பயன்​படுத்​தி, மின்​னுற்​பத்தி செய்​யப்​படு​கிறது. கப் பலில் இருந்து முனை​யத்​துக்கு நிலக்​கரி எடுத்து வரு​வதற்​கான அமைப்பு ஏற்​படுத்​தும் பணி​கள் விரை​வில் முடிக்​கப்​படும்.

வணிக மின்​னுற்​பத்​தியை தொடங்க திட்​ட​மிட்​டபடி அனைத்து அலகு​களில் உற்​பத்தி செய்ய வேண்​டும். ஒரு மின்​நிலை​யம் முழு திறனில், 72 மணி நேரத்​துக்கு தொடர்ந்து மின்​னுற்​பத்தி செய்த பின், வணிக மின் உற்​பத்தி துவங்​கிய​தாக அறிவிக்​கப்​படும். எனவே, உடன்​குடி​யில் சோதனை பணி களை விரை​வாக முடித்​து, இந்​தாண்டு இறு​திக்​குள் வணிக மின் உற்​பத்தி துவக்​கப்படும். இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...

Follow

FOLLOW US

தவறவிடாதீர்!

Read Entire Article