Last Updated : 21 Sep, 2025 02:42 PM
Published : 21 Sep 2025 02:42 PM
Last Updated : 21 Sep 2025 02:42 PM

சென்னை: ஆதார் அட்டையை எளிதாக வாட்ஸ்-அப்பில் டவுன்லோட் செய்வது எப்படி என்பதை பார்ப்போம். இதற்கு அரசின் ‘MyGov ஹெல்ப் டெஸ்க்’ சாட்பாட் உதவுகிறது.
நம் நாட்டில் வங்கி சேவை, அரசுத் துறை சேவைகள், தொலைபேசி இணைப்பு, பல்வேறு சேவைகளைப் பெற ஆதார் அட்டை அவசியமானதாக அமைந்துள்ளது. இருப்பினும் ஆதார் அட்டை தேவைப்படும் இடங்களில் அதை டிஜிட்டல் வடிவிலோ அல்லது கைவசமோ இல்லாமல் இருக்கும். இதற்கு தீர்வு காணும் வகையில் அமைந்துள்ளது அரசின் முன்னெடுப்பு.
ஆதார் அட்டை தேவைப்படும் மக்கள், அதனை மிக சுலபமாக மற்றும் துரிதமாக வாட்ஸ்-அப் மூலம் பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது. இதன் மூலம் ‘MyGov ஹெல்ப் டெஸ்க்’ சாட்பாட்டில் இருந்து ஆதார் அட்டையை டவுன்லோட் செய்யலாம். இது டிஜிலாக்கர் உடன் லிங்க் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனர் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் யுஐடிஏஐ தளத்தில் லாக்-இன் செய்யாமல் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியும்.
ஆதார் அட்டையை வாட்ஸ்-அப்பில் டவுன்லோட் செய்வது எப்படி?
>இதற்கு முதலில் பயனர்கள் தங்கள் வாட்ஸ்-அப்பில் ‘MyGov ஹெல்ப் டெஸ்க்’-இன் வாட்ஸ்-அப் எண்ணான +91-9013151515 எண்ணை போனின் தொடர்பில் சேர்க்க வேண்டும்.
>பின்னர் வாட்ஸ்-அப்பில் அந்த எண்ணில் சாட் செய்யலாம்.
>அந்த சாட்பாட் தரும் ஆப்ஷனில் ‘டிஜிலாக்கர்’ சேவையை தேர்வு செய்ய வேண்டும்.
>‘டிஜிலாக்கர்’ கணக்கு இல்லாதவர்கள் அதன் தளம் அல்லது செயலியில் ஆதார் எண்ணை கொண்டு பயனர் கணக்கு தொடங்க வேண்டும்.
>பின்னர் ‘MyGov ஹெல்ப் டெஸ்க்’ சாட்பாட்டில் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
>தொடர்ந்து ஆதார் எண் லிங்க் செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்.
>பின்னர் அந்த ஓடிபி எண்ணை உள்ளிட்டால் ‘டிஜிலாக்கர்’ தளத்தில் சம்பந்தப்பட்ட பயனர் அரசு தரப்பில் பெற்ற அடையாள அட்டைகள் உள்ளிட்ட விவரங்கள் வரும்.
>அதில் ஆதார் அட்டையை தேர்வு செய்தால். அது பிடிஎப் வடிவில் சாட்பாட்டில் கிடைக்கும்.
லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...
FollowFOLLOW US
தவறவிடாதீர்!
- இதுவரை 7 போர்களை நிறுத்தியுள்ளேன்; எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும்: ட்ரம்ப்
- ஓபிஎஸ், தினகரன் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக் கொள்வோம்: நயினார் நாகேந்திரன்
- பிரதமர் மோடியின் தாயாரை அவமதித்ததாக ஆர்ஜேடி மீது பாஜக மீண்டும் குற்றச்சாட்டு
- ‘என் ரசிகர்கள் யாருடைய வம்புக்கும் செல்ல மாட்டார்கள்’ - தனுஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!