ஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

1 day ago 5

Last Updated : 21 Sep, 2025 08:30 AM

Published : 21 Sep 2025 08:30 AM
Last Updated : 21 Sep 2025 08:30 AM

<?php // } ?>

துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றில் இன்று இரவு இந்​தியா - பாகிஸ்​தான் அணி​கள் மோதுகின்​றன.

ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இந்த தொடர் தற்​போது சூப்​பர் 4 கட்​டத்தை எட்​டி​யுள்​ளது. இதில் இன்று இரவு 8 மணிக்கு துபா​யில் நடை​பெறும் ஆட்​டத்​தில் இந்​தியா - பாகிஸ்​தான் அணி​கள் மோதுகின்​றன.

சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி லீக் சுற்​றில் 3 ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்று ‘ஏ’ பிரி​வில் முதலிடம் பிடித்து இருந்​தது. முதல் ஆட்​டத்​தில் 9 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் ஐக்​கிய அரபு அமீரகத்​தை​யும், 2-வது ஆட்​டத்​தில் 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் பாகிஸ்​தானை​யும், கடைசி லீக் ஆட்​டத்​தில் ஓமன் அணியை 21 ரன்​கள் வித்​தி​யாசத்​தி​லும் இந்​திய அணி வீழ்த்​தி​யிருந்​தது.

சல்​மான் அலி ஆகா தலை​மையி​லான பாகிஸ்​தான் அணி லீக் சுற்​றில் 2 வெற்​றி, ஒரு தோல்​வியை பதிவு செய்​திருந்​தது. ஓமன் அணியை 93 ரன்​கள் வித்​தி​யாசத்​தி​லும், ஐக்​கிய அரபு அமீரக அணியை 41 ரன்​கள் வித்​தி​யாசத்​தி​லும் தோற்​கடித்த பாகிஸ்​தான் அணி, இந்​தி​யா​விடம் 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்ந்​திருந்​தது. லீக் சுற்​றின் போது இந்​திய அணி டாஸ் போடும் போதும், போட்டி முடிவடைந்த பின்​னரும் பாகிஸ்​தான் வீரர்​களு​டன் கைகுலுக்​க​வில்​லை.

இந்த நிலையை இந்​திய அணி வீரர்​கள் இன்​றைய ஆட்​டத்​தி​லும் தொடரக்​கூடும். ஓமன் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் ஓய்வு கொடுக்​கப்​பட்​டிருந்த ஜஸ்​பிரீத் பும்​ரா, வருண் சக்​ர​வர்த்தி மீண்​டும் களமிறங்க உள்​ளனர். இதனால் பந்து வீச்சு வலு​வடை​யும்.

அக்​சர் படேல் பீல்​டிங்​கின் போது தலை பகு​தி​யில் காயம் அடைந்​திருந்​தார். எனினும் அவர், நலமுடன் இருப்​ப​தாக இந்​திய அணி​யின் பீல்​டிங் பயிற்​சி​யாளர் தெரி​வித்​துள்​ளார். லீக் சுற்று போன்றே இம்​முறை​யும் இந்​திய அணி​யின் சுழற்​பந்து வீச்சு துறை பாகிஸ்​தான் பேட்​டிங் வரிசைக்கு அழுத்​தம் கொடுக்​கக்​கூடும். பேட்​டிங்​கில் கடந்த ஆட்​டத்​தில் அரை சதம் அடித்த சஞ்சு சாம்​சனிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல் திறன் வெளிப்​படக்​கூடும்.

டாப் ஆர்​டரில் அபிஷேக் சர்மா சிறந்த பார்​மில் உள்​ளார். ஷுப்​மன் கில்​லும் மட்​டையை சுழற்​றும் பட்​சத்​தில் அதிரடி தொடக்​கம் கிடைக்​கும். நடு​வரிசை​யில் சூர்​யகு​மார் யாதவ், திலக் வர்​மா, ஷிவம் துபே, ஹர்​திக் பாண்​டியா ஆகியோர் பலம் சேர்க்​கக்​கூடிய​வர்​களாக திகழ்​கின்​றனர்.

சர்​வ​தேச கிரிக்​கெட் அரங்​கில் ஒரு​காலத்​தில் கணிக்க முடி​யாத அணி​யாக திகழ்ந்த பாகிஸ்​தான் அணி தற்​போது திறன் குறைந்து காணப்​படு​கிறது. பேட்​டிங்​கில் அந்த அணி வீரர்​கள் சுழற்​பந்து வீச்சை கணித்து விளை​யாடு​வ​தில் தடு​மாறி வரு​கின்​றனர். பஹர் ஸமான் மட்​டுமே நம்​பிக்கை அளிக்​கக்​கூடிய பேட்​ஸ்​மே​னாக உள்​ளார். தொடக்க வீர​ரான சைம் அயூப் இரு ஆட்​டங்​களில் டக் அவுட் ஆகி உள்​ளார். எனினும் பந்து வீச்சில் அவர், கைகொடுத்து வரு​கிறார்.

சாஹிப்​சாதா ஃபர்​ஹான், ஹசன் நவாஸ் ஆகியோரிடம் இருந்து பெரிய அளவி​லான பேட்​டிங் திறன் வெளிப்​பட​வில்​லை. இவர்​களை விட பின்​வரிசை​யில் வேகப்​பந்து வீச்​சாள​ரான ஷாகின் ஷா அப்​ரிடி தனது அதிரடி​யால் மட்டை வீச்​சில் அணிக்கு ஓரளவு கைகொடுத்து வரு​கிறார். அணியை பலப்​படுத்​தும் வித​மாக இன்​றைய ஆட்​டத்​தில்​ சில ​மாற்​றங்​கள்​ இருக்​கக்​கூடும்​.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...

Follow

FOLLOW US

தவறவிடாதீர்!

Read Entire Article