அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு.. போலீஸ் அதிகாரிகள் 3 உயிரிழப்பு..!

3 days ago 6

Last Updated:September 19, 2025 3:14 PM IST

பென்சில்வேனியா யார்க் கவுண்டி நார்த் கோடோரஸ் டவுன்ஷிப் பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் 3 போலீசார் உயிரிழந்தனர், ஜோஷ் ஷாபிரோ ஆறுதல் தெரிவித்தார்.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆங்காங்கே எதிர்பாராத விதமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி பல்வேறு அப்பாவி உயிர்கள் பறிபோவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் தற்போது அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் நிகழ்ந்துள்ள துப்பாக்கிசூடு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள யார்க் கவுண்டியில், நார்த் கோடோரஸ் டவுன்ஷிப் பகுதியில் தான் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியது. குடும்பத்தகராறு சம்பந்தமாக ஒரு நபரை கைது செய்வதற்காக சில போலீசார் அப்பகுதிக்கு சென்றுள்ளனர். குற்றவழக்குகள் நிலுவையில் உள்ள அந்த நபர் திடீரென போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். போலீசார் சற்றும் எதிர்பாராத சூழலில் நிகழ்த்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே 3 போலீசார் உயிரிழந்து விட்டனர்.

படுகாயமைடைந்த 2 போலீசார் மீட்கப்பட்டனர். போலீசார் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் அந்த நபர் கொல்லப்பட்டார். அவரின் அடையாளத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை. காயமடைந்த போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவாகி விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது என போலீசார் தரப்பில் தெரிவக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள அபராத வரி ரத்து? - பொருளாதார ஆலோசகர் சொன்ன தகவல்!

மாகாண கவர்னர் ஜோஷ் ஷாபிரோ மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த அதிகாரிகளை சந்தித்து அவர்களது குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்தார். இது யார்க் கவுண்டிக்கும், முழு பென்சில்வேனியா மாகாணத்திற்கு மிகுந்த வேதனையளிக்கும் நாள் என்று அவர் குறிப்பிட்டார். அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளரும், தீவிர வலதுசாரியுமான சார்லி கிர்க் என்பவர் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போதே இளைஞர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறி 3 போலீசார் உயிரிழந்திருப்பது அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

First Published :

September 19, 2025 3:14 PM IST

Read Entire Article