ஹூரூன் செல்வ அறிக்கை 2025: இந்தியாவில் 8.71 லட்சம் குடும்பங்கள் கோடீஸ்வரர்கள். மும்பை, டெல்லி, கர்நாடகா முன்னிலை. சென்னை 6-வது இடம்.
Published:34 mins agoUpdated:34 mins ago
மெர்சிடீஸ்-பென்ஸ் ஹூரூன் நிறுவனம் நேற்று இந்தியாவின் செல்வ அறிக்கை, 2025-ஐ வெளியிட்டுள்ளது.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
இந்தியா முழுவதும் 1 மில்லியன் டாலர் (ரூ. 8 கோடியே 50 லட்சம்) மதிப்புள்ள இந்திய குடும்பங்களின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட 8.71 லட்சம் ஆகும்.
இந்த எண்ணிக்கை 2017-ம் ஆண்டு 1.59 லட்சமாகவும், 2021-ம் ஆண்டு 4.58 லட்சமாகவும் இருந்துள்ளது.
அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இங்கே 1.78 லட்ச குடும்பங்கள் கோடீஸ்வரர்களாக இருக்கின்றன.
கோடீஸ்வரர்
அதிலும் மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் மட்டும் 1.42 லட்ச குடும்பங்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இதனால், இந்த நகரம், 'இந்தியாவின் கோடீஸ்வரர்களின் நகரம்' என்று அழைக்கப்படுகிறது. அடுத்தடுத்த இடங்களை முறையே டெல்லி (79,800 குடும்பங்கள்) மற்றும் கர்நாடகா பிடித்துள்ளது. அதிக கோடீஸ்வர குடும்பங்களைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் சென்னை 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ள நகரங்கள் மும்பை, புது டெல்லி, பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஆகும்.