``அதானி மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு ஆதரமற்றது'' - செபி அறிக்கை; சந்தோஷத்தில் அதானி பதிவு!

3 days ago 6

2023 ஹிண்டன்பர்க் அறிக்கையில் அதானி குழுமத்தின் மீது மோசடி குற்றம் சாட்டப்பட்டது. தற்போது செபி, எந்த விதிமீறலும் இல்லை என அறிவித்து அதானிக்கு கிளீன் சிட் வழங்கியுள்ளது.

Published:Today at 8 AMUpdated:Today at 8 AM

அதானி

அதானி

2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கை அதானி குழுமத்தையே கொஞ்சம் அசைத்துப் பார்த்தது.

ஹிண்டன்பர்க் அறிக்கை

ஹிண்டன்பர்க் அறிக்கையில் அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி பவர் போன்ற அதானி குழுமத்தின் பங்குகளின் விலையை உயர்த்திக் காட்டுவதற்காக, அதானி குழுமம் ஷார்ட் செல்லிங் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளை செய்ததாக குற்றச்சாட்டுகளை கூறியது.

SEBI - செபி

SEBI - செபி

செபி விசாரணை

இந்த வழக்கை செபி தொடர்ந்து விசாரித்து வந்தது. இந்த விசாரணை குறித்து தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது செபி. அதில், எந்தவொரு விதிமீறலும் நடைபெறவில்லை. எந்தவிதமான மோசடி அல்லது நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளும் இடம்பெறவில்லை என்று செபி கூறியுள்ளது.

அதானி சொல்வது என்ன?

இந்த அறிக்கைக்கு பின், கௌதம் அதானி தனது சமூக வலைதளப் பதிவில், “தீவிர விசாரணைக்குப் பிறகு, ஹிண்டன்பர்க் கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நாங்கள் தொடர்ந்து கூறி வந்ததை, செபியும் உறுதி செய்துள்ளது.

வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை எப்போதும் அதானி குழுமத்தின் அடையாளங்களாக இருந்துள்ளன.

அதானி - ஹிண்டன்பர்க்

அதானி - ஹிண்டன்பர்க்

மோசடியான மற்றும் உள்நோக்கத்துடன் கூடிய அறிக்கையால் பணம் இழந்த முதலீட்டாளர்களின் வலியை நாங்கள் உணர்கிறோம். தவறான தகவல்களைப் பரப்பியவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இந்திய நிறுவனங்கள், இந்திய மக்கள் மற்றும் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான எங்களது அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது.

சத்யமேவ ஜயதே! ஜெய் ஹிந்த்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

After an exhaustive investigation, SEBI has reaffirmed what we have always maintained, that the Hindenburg claims were baseless. Transparency and integrity have always defined the Adani Group.

We deeply feel the pain of the investors who lost money because of this fraudulent… pic.twitter.com/8YKeEYmmp5

— Gautam Adani (@gautam_adani) September 18, 2025
Read Entire Article