Suriya: சூர்யா படத்துக்கு இப்படியொரு சிக்கலா? ரெண்டு பக்கமும் கால்-அ வச்சா இப்படித்தான்

2 days ago 5

suriya 3

Cinema News

Published on September 20, 2025

Suriya:

கங்குவா, ரெட்ரோ என தொடர்ந்து தோல்வி படங்களையே கொடுத்து வந்த சூர்யா அடுத்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற திரைப்படத்திலும் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். ரெட்ரோ திரைப்படத்திற்கு பிறகு ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்க தொடங்கிய சூர்யா அந்த படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்த நிலையில் அந்தப் படமாவது சூர்யாவுக்கு கை கொடுக்குமா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அதுவும் ஒருவித ஆர்வத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியது. ஏனெனில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யாவும் திரிஷாவும் இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். அதனால் அவர்களின் இந்த ஜோடி இப்போது திரையில் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது என்பதை பார்க்கவே அனைவரும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் குறுகிய கால படப்பிடிப்பு என்பதால் அதை சீக்கிரம் முடித்து விடலாம் என அந்த படத்திற்கு கால்ஷீட் கொடுத்து அதில் நடித்து வருகிறார் சூர்யா. இப்போது அந்த படத்திற்கு தான் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு அம்மாவாக ராதிகா நடித்து வருகிறார் .

சில தினங்களுக்கு முன்பு ராதிகா டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு ஓய்வில் இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. அது அந்த படத்தின் படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் தான் அவர் டெங்கு காய்ச்சலால் அவதியுற்று இருந்திருக்கிறார். அதனால் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டு ஓய்வு எடுத்து வந்தார் ராதிகா. அதனால் அந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் ராதிகா. அதன் பிறகு உடனே ராதிகாவின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என மீண்டும் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு ராதிகா கிளம்பிவிட்டார்.

இதனால் மீண்டும் வெங்கி அட்லூரி சூரியா இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. குறுகிய கால படப்பிடிப்பு என்ற வகையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த படம் இப்போது இந்த ஒரு பிரச்சினையால் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் இதை முடித்துக்கொண்டு உடனே கருப்பு படத்தை முடித்து விடலாம் என்று சூர்யா நினைத்திருந்தார்.

ஆனால் வெங்கி அட்லூரி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இப்படி ஒரு பிரச்சனையில் இருக்கும் போது கருப்பு படத்தின் படப்பிடிப்பையும் தொடர முடியாமல் இருக்கிறார்கள். இப்படி மாறி மாறி இரண்டு படங்களுமே தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த முடியாமல் திணறி வருகிறார்கள். அதனால் சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்கள் .எப்படியாவது சூர்யாவுக்கு ஒரு வெற்றி கிடைத்தே ஆக வேண்டும் என்ற ஆர்வத்திலும் சூரியா ரசிகர்கள் இருக்கிறார்கள் .

venky atluri

அவர் ஒரு பெரிய வெற்றி கொடுத்தே பல ஆண்டுகள் ஆகிவிட்டது. கங்குவா திரைப்படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்து இருந்தனர் .படத்தின் பட்ஜெட்டும் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் இருந்தது .ஆனால் அந்தப் படம் ஒரு மாபெரும் டிசாஸ்டர் திரைப்படமாக சூர்யாவின் கேரியரில் அமைந்தது. அதனை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் சூர்யா காம்போ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. அந்தப் படமும் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. அதனால் அடுத்து வரும் படமாவது சூர்யாவுக்கு கை கொடுக்குமா? என எதிர்பார்த்த நிலையில் இப்படி ஒரு புது விதமான பிரச்சினையில் சூர்யாவின் இரண்டு படங்களுமே சிக்கி இருக்கிறது.

author avatar

நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.

More in Cinema News

Read Entire Article