விமானப் பயணத்தினைப் பற்றி பலரும் அறியாத விஷயங்கள் எவை?


பல விஷயங்கள் உள்ளன. எனக்கு தெரிந்ததை, படித்ததை, கண்ணால் கண்டதை சொல்கிறேன்:

.

பல விஷயங்கள் உள்ளன. எனக்கு தெரிந்ததை, படித்ததை, கண்ணால் கண்டதை சொல்கிறேன்:

 • வார இறுதியில் சர்வதேச பயணம் செய்வதை விட, வார நாட்களில் பயணம் செய்பவர் குறைவு. போர்டிங் பாஸ் வாங்கும் நேரத்தில் எகானமி பயணச் சீட்டை முதல் வகுப்பு அல்லது பிசினஸ் கிளாஸாக(Business class) மாற்றிக் கொள்கிறீர்களா என்று கேட்பார்கள், $150 முதல் $200 வரை அதிகம் ஆகும். ஆசைக்கு ஒரு தரம் பிசினஸ் கிளாசில் பயணம் செய்து பாருங்கள். சும்மா, அப்படி இருக்கும் கவனிப்பு.
 • அதுவே நீங்களே அப்பாவியாக (இளிச்சவாய்த்தனமாக) முன்னரே பிசினஸ் கிளாஸ் டிக்கெட் எடுத்தால், குறைந்தது $800 முதல் $1500 வரை டிக்கெட் விலை அதிகமாக இருக்கும்.
  • போர்டிங் பாஸ்(Boarding pass) வழங்குபவரிடம் நட்போடு ஒரு புன்னைகை செய்யுங்கள், உதட்டால் அல்ல, உங்கள் கண்களில் தெரிய வேண்டும். அந்த மகமாயி மனசு வைத்தால், இலவசமாகவே உங்கள் டிக்கெட்டை, பிசினஸ் கிளாசுக்கு மாற்றி விடும் வல்லமை உண்டு.

  "பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்!

  பின்வாசல் முற்றத்திலே துளசி மாடம்"

  • ஜன்னலோர இருக்கைகள் பேருந்திலும், ரயிலிலும் தான் அழகு. விமானத்தில் ஜன்னலோர இருக்கைகள் தான் மிகவும் அழுக்காக இருக்குமாம்.
  • எனவே ஜன்னல் சீட்டுக்கு ஆலாய் பறக்காதீர்கள். ஜன்னல் சீட்டில் உட்கார்ந்தால், வெளியே தேவர்கள், ரம்பா, மேனகை, கந்தர்வர்கள் என யாரும் தெரிய மாட்டார்கள்.
  • உங்களுக்கு அவசரமாக முட்டிக் கொண்டு வரும் நேரத்தில், நடு சீட்டில் உள்ளவரும், ஓரத்து சீட்டில் உள்ளவரும் குறட்டை விட்டு தூங்குவார்கள். ஒருவாறு எழுப்பி, நீங்கள் டாய்லெட்டுக்கு ஓடினால், அங்கு ரேஷன் கடை மாதிரி வரிசை நிற்கும்.

  பட விநயம்: கூகிள் தேடலில் www.flyertalk.com

  • உணவு வேளையில், நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தால், உங்களை எழுப்பி எல்லாம் உணவை தர மாட்டார்கள். உடனே அவசரப்பட்டு பட்டனை அமுக்கி விடாதீர்கள்.

  பட விநயம்: ஊட்டி விடுவதும் கூகிள் Images

  • நிதானமாய் எழுந்து போய், அவர்களிடம் விபரத்தை சொல்லி, அங்கேயே வாங்கி உண்ணுங்கள். உங்களுக்கு திறமை இருந்தால், ஒன்றுக்கு நாலு தேவதைகள், உங்களை நன்றாக கவனிப்பார்கள்.
  • பயணம் முடிந்து விமானத்தை விட்டு வெளியே வரும் போது, விநயமாக கேட்டுக் கொண்டால், விமான கேப்டனுக்கு நன்றி சொல்லி விட்டு, அவருடன் ஒரு செல்பி எடுத்துக் கொள்ளலாம். இது முழுக்க முழுக்க அவரது விருப்பம் தான். நிற்க! காக்பிட்டில் பைலட்டை தவிர யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். அப்படி அனுமதித்தால் பைலட்டுக்கு வேலை போயி விடும்.
  • விமான நிலையத்தில் ஒரு டப்பா சாக்லேட் (பெராரி ராச்சர் அல்லது பெல்ஜியம் சாக்லேட்டுகள்) வாங்கிக் கொண்டு, விமானப் பணிப்பெண்களுக்கு, அவர்கள் அயராத சேவைக்கு நன்றி தெரிவித்து, "உங்கள் மொத்த டீமுக்கும்!" என்று பெட்டியை நீட்டிப் பாருங்கள். நீங்கள் செல்லும் தேசத்தில், மாதம் மும்மாரி பெய்யும்.
  • இதை ஏற்கனவே ஒருவர் செய்து, ஆங்கில கோராவில் படமும் போட்டு, பலரை வாய் பிளக்க வைத்துள்ளார். லிங்க் கிடைத்தால் பின்பு பகிர்கிறேன். :)
  • 15 மணி நேர விமான பயண நேரத்தில், ஒரு வேளை சாப்பிட மறந்தாலும் பரவாயில்லை, அடிக்கடி தண்ணீர் அருந்த மறவாதீர்.
  • இலவசமாக கிடைக்கிறதே என்று மேலும், மேலும் மதுவின் எந்த வகையாக இருந்தாலும் அருந்த வேண்டாம். ஏற்கனவே 40 ஆயிரம் அடியில் தான் பறந்து/மிதந்து கொண்டிருக்கிறீர்கள்.
  • முதலில் விமானப் பணிப்பெண் உங்களுக்கு முகம் துடைக்க நாப்கின் தருவார்கள். அதில் ஒரு வேளை, "FO Armed" என்று எழுதி இருந்தால், அவர்களை அழைத்து "இது எனக்கில்லை, நான் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டேன்" என்று சொல்லி விடுங்கள், ரகசியமாக தான். FO - First Officer
  • அமெரிக்காவில் 9/11க்கு பிறகு, பைலட்டுகள் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி உண்டு. அதே போல, சில குறிப்பிட்ட நபர்கள், பயணிகளாக பயணம் செய்யும் போது. பொருள் எடுத்து செல்ல சிறப்பு அனுமதி உண்டு. அப்படி சிறப்பு அனுமதி பெற்ற நபர் யார்? என கண்டிப்பாக பைலட்டுக்கு தெரியப்படுத்துவார்கள்.
  • "மச்சி, உங்கிட்ட பொருள் இருக்குன்னு எனக்கு தெரியும்!" என்று விமானியும் அவருக்கு தெரியப்படுத்த, ஒரு விமானப் பணிப்பெண்ணை அழைத்து, "பி வரிசையில் 21வது சீட்டில் இருக்கும் நபருக்கு இந்த நாப்கினை கொடுத்துடும்மா" என்று ரகசிய செய்தி அனுப்புவார்.
  • அந்த அம்மணி, தவறுதலாக சி வரிசையில் 21வது நபராக அமர்ந்திருக்கும் உங்களிடம் தந்து விட்டார். இது தான் விஷயம்.
  • இது அமெரிக்க உள்ளூர் விமானங்களுக்கு மட்டுமா அல்லது சர்வதேச விமானத்துக்குமா? என்ற விபரம் தெரியவில்லை. ஆங்கில கோராவில் படித்தேன், இங்கு பகிர்ந்தேன்.
21 Views

Comments