’விக்ரம்’ படத்தின் ட்ரெயிலரில் 90% பேர் கவனிக்கத் தவறிய, மிக முக்கியமானக் குறியீடு, செய்தி என்னவென்று தெரியுமா?


(வயது 66 என்று கொண்டாடுகிறார்கள் .. என்னைக் கேட்டால் 76 என்பேன் … எதிலும் 10 ஆண்டுகள் முன்னோடியாக சிந்திப்பதால் :)

.

(குறிப்பு : கன் / கண் = முழு ஆய்வுப்பதிவு… )

ஆம்., படத்தின் அடிவேரே அதுதான் …. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் கண்டு பிடித்து விடலாம் …

தெரிந்தால் அது இன்னும் கூடுதல் வியப்பளிக்கும் .. ஒரு 2 நிமிடப் படக்காட்சிக்குள் , எந்தவகைப் படம் இது என்னும் செய்தியை நேரடியாகவும் , கரு பற்றியக் மிக முக்கியக் குறிப்பை மறைமுகமாகவும் வைக்க , , படக் குழுவினர் எடுத்திருக்கும் சிரத்தை., மிக ஆச்சரியத்துக்குள் உள்ளாக்கும் ..,

(வயது 66 என்று கொண்டாடுகிறார்கள் .. என்னைக் கேட்டால் 76 என்பேன் … எதிலும் 10 ஆண்டுகள் முன்னோடியாக சிந்திப்பதால் :)

உழைப்புக்குக் தகுந்த பலன் கிடைக்கும், கிடைக்க வேண்டும் …. வாழ்த்துவோம் …

.================================================

விடையை நான் கண்டுபிடித்துவிட்டேன் :)

விவரங்கள் கொஞ்சம் இடைவெளி விட்டு இங்கேயே தொடர்ந்து வரும் :)

.===================================================

நம்ம பார்வை, எப்போதுமே ரொம்பக் கோணங்கி, கொஞ்சம் அகராதியாத் தானிருக்கும் :)

விடை :

காட்டப் பட்டிருக்கும் ஆயுதம் = கன் (GUN)

மறைக்கப் பட்டிருக்கும் ஆயுதம் = கண் ., ஆம்

மீண்டும் கவனியுங்கள் , இப்படத்தில், இக்காட்சியில் கமலுக்குக் கண் தெரியாது …

சான்றுகள் :

துப்பாக்கிகளைச் சோதிக்கும் போது , காதுகள் போக்கஸ் செய்யப்பட்டிருக்கும். காதுகளுக்கு அருகில் பக்கவாட்டில் வைத்து சோதிப்பார், அவரது பார்வை துப்பாக்கியைப் பார்க்காமல், வேரிடத்தில் நிலைத்திருக்கும்

.

ஒரு பர்பக்சனிஸ்ட் புத்தக அலமாரியில் புத்தகங்கள், ஒழுங்கின்றி மாற்றி மாற்றி அடுக்கப்பட்டிருக்கும்

.

குக்கர் ஒலி, சைரன் ஒலி கேட்ட பின்பே திரும்பிக் கவனிப்பார்

.

கவனிக்க : (கண்கள் கீழ் நோக்கி இருக்கும் … ராஜபார்வையிலேயே திறன் குறைவென்றால், கண்கள் மேல் நோக்கிக் இருக்கும் என்னும் இலக்கணத்தை உடைத்தவர்) கண்களில் உயிர்ப்பு இருக்காது …

.

நாற்காலிகளுக்குப்பின் , அளந்து வைக்கப்படும் காலடிகள்

நாற்காலியை இழுக்கும் ஓசை, அப்பளம் உடைக்கும் / நல்லி எலும்புகளைத் தட்டும் ஓசை.,எல்லாம் கோடாரிக்கு இலக்குகளின் இருப்பிடத்தைக் காட்டும் குறிப்புகள்

..

இப்போ ‘’ஆரம்பிக்கலாங்களா !’’

.. அவ்வளவே :

  • இப்பொழுது ‘டீசரை’ இன்னுமொரு முறை பார்க்கவும் !
  • மிகப் புதிதாய் உணர்வீர்கள் :)

Comments