
சந்தாதாரராக இருப்பவரிடம் பாஸ்வேர்டை பெற்று இணைய தொடர்களை கண்டுகளித்து வருபவர்களுக்கு, அந்நிறுவனம் கிடுக்கிபிடி போட்டுள்ளது.
Netflix நிறுவனத்தில் பணம் செலுத்தும் சந்தாதாரர்களுக்கு பிரத்யேக பாஸ்வேர்டு வழங்கப்படுகிறது.
சந்தாதாரர்கள் தங்களது குடும்பத்தினர், நண்பர்களுடன் பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்வதால், பணம் செலுத்தாமல் Netflix தளத்தை அவர்கள் பயன்படுத்த முடிந்தது.
இதனால், Netflix-இல் புதிய சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் தேக்கம் ஏற்பட்டதுடன்,
ஏற்கனவே இருப்பவர்களும் சந்தாவை நீட்டிக்காததால் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இதனால், Netflix கணக்குகளை மின் சாதனங்களின் IP Adress மூலம் நிர்வகிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, ஒவ்வொரு சந்தாதாரரும், தான் பதிவு செய்த மின்சாதனத்தில் மட்டுமே Netflix தளத்தை பயன்படுத்த முடியும் எனவும்,
வெளி நபர்களுக்கு பாஸ்வேர்டை பகிர வேண்டும் என்றால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.