Jana Nayagan: ``ஜனநாயகன் திரைப்படம் ஒரு கம்ப்ளீட் மீல்ஸ்!" - அப்டேட் கொடுத்த இயக்குநர் அ.வினோத்

3 days ago 34

விஜய் நடித்திருக்கும் 'ஜனநாயகன்' திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் ரிலீசாக திரைக்கு வருகிறது.

Published:Just NowUpdated:Just Now

Jananayagan

Jananayagan

விஜய் நடித்திருக்கும் 'ஜனநாயகன்' திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் ரிலீசாக திரைக்கு வருகிறது.

அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல் ஆகியோரும் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக படத்தின் ப்ரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து அ.வினோத்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக படத்தின் பி.டி.எஸ் காணொளிகயையும் வெளியிட்டிருந்தார்கள்.

Jananayagan

Jananayagan

அனிருத் இசையமைக்கும் 'ஜனநாயகன்' படத்தின் பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போதுமே தன்னுடைய திரைப்படம் எப்படியான ஸ்டைலில் இருக்கும் என பெருமையாக அ.வினோத் பெரிதளவில் பொது வெளியில் பகிர்ந்துக் கொள்வதை விரும்பமாட்டார்.

ஆனால், 'ஜனநாயகன்' திரைப்படம் தொடர்பாக சமீபத்திய நிகழ்வில் படம் எப்படி இருக்கும் என்பது குறித்து பேசியிருக்கிறார் இயக்குநர்.

அந்த நிகழ்வில் அ.வினோத், "ஜனநாயகன், விஜய் சாருக்கு பக்கா ஃபேர்வெல் திரைப்படமாக இருக்கும். மாஸ், கமர்ஷியல், ஆக்ஷன் என மூன்றையும் எதிர்பார்த்து படத்திற்கு வாங்க. திரைப்படம் நிச்சயமாக ஒரு கம்ப்ளீட் மீல்சாக இருக்கும்." எனக் கூறியிருக்கிறார்.

H Vinoth

H Vinoth

கடந்த ஜூன் மாதம் 'ஜனநாயகன்' திரைப்படம் குறித்து அப்படத்தின் தயாரிப்பாளரான வெங்கட் கே நாராயணன், "தளபதியின் அசாதாரண சினிமா பயணத்திற்கு நியாயம் செய்யும் ஒரு படத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.

'ஜன நாயகன்' ஃபேர்வெல் மட்டும் கிடையாது, இந்திய சினிமாவின் முகத்தை மாற்றிய ஒரு ஐகானின் கொண்டாட்டமாகவும் இருக்கும்," எனக் கூறியிருந்தார்.

Read Entire Article