இது கலோரிகள் எரிக்கப்படுவதற்குப் பதிலாக உடலில் கொழுப்பாகக் குவிவதற்கு வழிவகுக்கிறது. அதே நேரத்தில், மெதுவான வளர்சிதை மாற்றம் செரிமான பிரச்சனைகள் மற்றும் சோர்வுக்கு வழிவகுக்கும். வயதுக்கு ஏற்ப வளர்சிதை மாற்றம் குறையத் தொடங்குகிறது, குறிப்பாக 30 வயதிற்குப் பிறகு. இதுபோன்ற சூழ்நிலையில், உங்கள் உடல்நலம் புறக்கணிக்கப்பட்டால், எடை அதிகரிப்பு மற்றும் பல நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இருப்பினும், உங்கள் அன்றாட வாழ்க்கை முறையில் சில குறிப்புகளைப் பின்பற்றினால், உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கலாம்.
இதுகுறித்து மருத்துவர் அருஷ் சபர்வால் HT லைஃப்ஸ்டைலுக்கு அளித்த பேட்டியில், 30 வயதைக் கடந்த பிறகு, தசை எடை, ஹார்மோன்கள் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக உங்கள் உடலில் வளர்சிதை மாற்றம் குறைய தொடங்குகிறது என்று கூறியுள்ளார். ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், சரியான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடித்தால், 40 வயதுகளில் கூட உங்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த முடியும். இதற்காக அறுவை சிகிச்சை நிபுணர் கூறிய சில குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
1. புரதத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்: உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க, புரதம் நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். புரதம் நிறைந்த உணவானது உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும், மேலும் நமது உடல் அதை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இது உடலின் வெப்ப உற்பத்தியை அதிகரிக்கிறது. உணவு சாப்பிடும் ஒவ்வொரு வேளையும் குறைந்தது 20 முதல் 30 கிராம் வரை புரதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் இலக்கு நிர்ணயிக்க வேண்டும்.
2. எடைப் பயிற்சி அவசியம்: வயதுக்கு ஏற்ப உடலின் தசை எடை குறையத் தொடங்குகிறது, மேலும் இது உடலின் வளர்சிதை மாற்றத்தையும் குறைக்கிறது. அதிகபட்ச பலன்களை பெற, வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது உங்கள் வழக்கத்தில் எடைப் பயிற்சியைச் சேர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
3. காலை உணவு முக்கியம்: போதுமான அளவு புரதத்துடன் கூடிய சரிவிகித காலை உணவு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.
4. நீரேற்றத்தை பராமரித்தல்: உங்களை நீரேற்றமாக வைத்திருப்பதும் மிகவும் முக்கியம். ஏனெனில் லேசான நீரிழப்பு கூட கலோரி எரிப்பைக் குறைக்கிறது. வளர்சிதை மாற்றம் உட்பட ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியமாகும்.
5. மன அழுத்த மேலாண்மை: வயதாகும்போது, பொறுப்புகளின் சுமை அதிகரிக்கிறது. இதன் விளைவாக, மன அழுத்தமும் அதிகரிக்கிறது. ஆனால் மன அழுத்தம் உங்கள் வளர்சிதை மாற்றத்தின் மிகப்பெரிய எதிரியாக இருக்கலாம். மன அழுத்தத்தில் இருக்கும்போது, கார்டிசோலின் அளவு அதிகரித்து, உடலில், குறிப்பாக தொப்பையைச் சுற்றி கொழுப்புச் சேமிப்புக்கு வழிவகுக்கிறது. எனவே யோகா, தியானம் அல்லது ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் ஆகியவை மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகின்றன.
6. ஆழ்ந்த தூக்கம்: மருத்துவர்களின் கூற்றுப்படி, ஓய்வும் போதுமான தூக்கமும் அவசியம். இது உங்கள் உடலை ரீசார்ஜ் செய்ய உதவுவது மட்டுமல்லாமல், வளர்சிதை மாற்றத்திற்கும் அவசியமாகும். நீங்கள் போதுமான அளவு தூங்கி சரியான நேரத்தில் படுக்கைக்குச் சென்றால், பசியைத் தூண்டும் ஹார்மோன்கள் அவ்வளவு சுறுசுறுப்பாக இல்லை என்பதையும், உங்களுக்கு தேவையற்ற பசி ஏற்படுவதில்லை என்பதையும் நீங்கள் உணர்வீர்கள். எனவே, இரவில் தாமதமாக விழித்திருப்பவர்கள் பெரும்பாலும் நள்ளிரவு பசியை அனுபவிக்கிறார்கள். நீங்கள் போதுமான அளவு தூங்கவில்லை என்றால் உங்களுக்கு தேவையற்ற பசி ஏற்படுவது மட்டுமல்லாமல், வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும்.
7. பதப்படுத்தப்பட்ட உணவை குறைக்கவும்: உணவில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரைகளை எடுத்துக் கொள்வது இன்சுலின் அளவை அதிகரிக்கிறது, இது உடலில் கொழுப்புச் சேமிப்பிற்கு வழிவகுக்கிறது. எனவே முழு தானியங்கள், லீன் புரதங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உள்ளடக்கிய ஒரு சமச்சீர் உணவை உண்ண முயற்சி செய்யுங்கள்.
8. NEAT மீது கவனம் செலுத்துங்கள்: நீங்கள் ஜிம்மிற்குச் சென்றும் பலன்கள் கிடைக்கவில்லை என்றால், நான் எக்ஸர்சைஸ் அசிடிவிட்டி (NEAT) அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. அவற்றில் நடைப்பயிற்சி, படிக்கட்டுகளில் ஏறுதல் ஆகியவை அடங்கும்.
9. மசாலாப் பொருட்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றன: மிளகாய் மற்றும் இஞ்சி போன்ற சில உணவுகள் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுகின்றன.
10. நல்ல குடல் ஆரோக்கியத்தை பராமரித்தல்: ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரானது சிறந்த செரிமானத்திற்கும், உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கும் உதவுகிறது. எனவே தயிர், கேஃபிர் போன்ற புரோபயாடிக் நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
நியூஸ்18 தமிழின் லைஃப்ஸ்டைல் கேட்டகிரியானது, உடல்நலம், உணவு, டிராவல், ஃபேஷன், சமையல் குறிப்புகள் மற்றும் பலவற்றைப் பற்றிய சமீபத்திய தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது.
First Published :
September 20, 2025 5:57 PM IST