தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், லோகேஷ் கனகராஜ், அட்லி, மணி ரத்னம் ஆகியோர் தற்போது டாப் இயக்குனர்களாக திகழ்ந்து வருகின்றார்கள்.
இதில் ஷங்கர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வருகிறார். தற்போது ஷங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து ஒரு திரைப்படத்தையும் தமிழில் கமல்ஹாசனை வைத்து “இந்தியன் 2” திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். ஒரு முறையாவது ஷங்கரின் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துவிட வேண்டும் என்று எந்த நடிகருக்கு விருப்பம் இருக்கும். அந்தளவுக்கு இந்தியாவின் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் ஷங்கர்.

Shankar
இவரை தொடர்ந்து இயக்குனர் அட்லி சமீபகாலமாக ஒரு பக்கா கம்மெர்சியல் இயக்குனராக வலம் வருகிறார். தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து “ஜவான்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து விஜய்யின் “தளபதி 68” திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது.

Atlee
இந்த நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணனிடம் நேயர் ஒருவர் “தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர் யார்?” என ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.
அதற்கு சித்ரா லட்சுமணன் “இப்போது தமிழ் சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் இயக்குனர்கள் யார் யாரென்றால், அது குருவும் சிஷ்யனும்தான். இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் இயக்குனராக திகழ்கிறார். அவருக்கு பிறகு அவருடைய சிஷ்யரான அட்லி அதிக சம்பளம் வாங்குபவராக திகழ்கிறார்” என பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க: ஐந்து நாட்களில் முழு படத்தையும் முடித்து கொடுத்த ரேவதி.. அது என்ன படம் தெரியுமா?..

Atlee and Shankar
இயக்குனர் அட்லி, தொடக்கத்தில் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
GIPHY App Key not set. Please check settings