நடிகை ராஷ்மிகா மந்தனா படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும், அவர் பற்றிய வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனால் மனதளவில் பாதிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். இதுபற்றி ராஷ்மிகா கூறியதாவது:
ரசிகர்கள் சிலர், நான் உடற்பயிற்சி செய்தால் ஆண் போல இருப்பதாகச் சொல்கிறார்கள். செய்யாவிட்டால் குண்டாக இருக்கிறேன் என்கிறார்கள். நான் அதிகமாகப் பேசினால் பயப்படுவதாகச் சொல்கிறார்கள். பேசவில்லை என்றால் திமிராக இருப்பதாகச் சொல்கிறார்கள். நான் மூச்சு விட்டாலும் அவர்களுக்கு பிரச்சனை, விடவில்லையென்றாலும் கூட பிரச்சனைதான். நான் என்ன செய்வது? நான் சினிமாவில் இருக்க வேண்டுமா? விலக வேண்டுமா? தயவு செய்து துஷ்பிரயோகம் செய்யாதீர்கள். வெறுப்பு வார்த்தைகள் மனதளவில் கடுமையானப் பாதிப்பை உண்டாக்குகின்றன. இவ்வாறு ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.
GIPHY App Key not set. Please check settings