புதுடெல்லி: கடந்த 2021ம் ஆண்டு நடந்த லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு 8 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் உத்தர பிரதேசத்தில் தங்க தடைவித்துள்ளது.
தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆஷிஸ் மிஸ்ரா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கை நீதிபதிகள் சூர்யகாந்த், ஜேகே மகேஸ்வரி அடங்கிய அமர்வு விசாரித்தது. கடந்த வாரத்தில் நடந்த விசாரணையின் போது, ஆஷிஸ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கினால் அது சமுதாயத்திற்கு தவறான செய்தியாகிவிடும் என்று உச்ச நீதிமன்றத்தில் கூறிய உத்தர பிரதேச அரசு, ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தது. அதற்கு ஆட்சேபம் தெரிவித்த மிஸ்ரா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, "தனது கட்சிக்காரர் ஓர் ஆண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு நடைபெறும் விதத்தைப் பார்க்கும்போது இன்னும் ஏழு எட்டு ஆண்டுகள் கூட வழக்கு நடக்கலாம். எனவே, தனது கட்சிக்காரருக்கு ஜாமின் வழங்க வேண்டும்." என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்கள் முடிந்ததை அடுத்து நீதிமன்றம் தீர்ப்பினை ஒத்திவைத்தது.
GIPHY App Key not set. Please check settings