in

நாட்டுப்பற்றை ஊட்ட வந்த தமிழ்ப்படங்கள் – ஓர் பார்வை


தமிழ்ப்படங்களில் நாட்டுப்பற்றை ஊட்டும் வகையிலான படங்களை குடியரசுதினத்தை முன்னிட்டுப் பார்த்து பெருமிதம் கொள்வோம். நமக்கும் நாட்டுப்பற்று வர வேண்டும்.

வளரும் சமுதாயத்திற்கு நாம் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்து நாட்டுக்குத் தேவையான நல்ல பல விஷயங்களை செய்து சாதித்துக் காட்ட வேண்டும். இனி நாட்டுப்பற்றை விளக்கும் படங்களைப் பார்ப்போமா…

பாரதவிலாஸ்

Bharathavilas

1973ல் வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் ஏ.சி.திருலோகச்சந்தர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். சிவாஜி, கே.ஆர்.விஜயா உள்பட பலர் நடித்துள்ளனர்.

சாதி, இன, மதம் என பல்வேறு வேறுபாடுகளைக் கொண்டது இந்தியா. ஆனால் வேற்றுமையிலும் அனைவரும் இந்தியரே என்று ஒற்றுமை உணர்வுடன் தெரிந்து கொள்ள வேண்டும். ஒற்றுமை வரும்போது தான் நாம் அந்நிய ஆளுமைகளுக்கு இடையில் இருந்து வெளிபட வேண்டும்.

ஒரு இந்தியக்கனவு

Oru Indhiya Kanavu

இந்தப் படத்தை இயக்கியவர் கோமல் சுவாமிநாதன். 1983ல் வெளியானது. மலைவாழ் மக்களுக்கு எல்லாவித உரிமைகளும் தரப்பட வேண்டும். ஒடுக்குமுறைகளில் இருந்து அவர்கள் காக்கப்பட வேண்டும் என்பதை இளம்பெண் முன்னின்று போராடி அதில் வெற்றியும் பெறுகிறாள்.

இதுதான் படத்தின் கதை. சுஹாசினி, ராஜீவ், பூர்ணம் விஸ்வநாதன், டி.எம்.சாமிக்கண்ணு, வாத்தியார் ராமன் உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். இந்தப்படம் சிறந்த தமிழ்ப்படத்துக்கான தேசிய விருது பெற்றது.

ரோஜா

1992ம் ஆண்டு வெளியான தமிழ்ப்படம். மணிரத்னம் இயக்கியுள்ளார். அரவிந்த்சாமி, மதுபாலா, ஜனகராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். கணவனைத் தீவிரவாதிகள் சிறைபிடிக்க அவனை விடுவிக்க மனைவி போராடும் கதை. மதுபாலாவின் நடிப்பு செம.

பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பும் ரகம். ருக்குமணி, சின்ன சின்ன ஆசை, காதல் ரோஜாவே, புது வெள்ளை மழை, தமிழா தமிழா, சின்ன சின்ன ஆசை ஆகிய பாடல்கள் உள்ளன. 3 தேசிய விருதுகளையும், 5 தமிழக அரசு விருதுகளையும் பெற்றுள்ளது.

இந்தியன்

Indian Movie

படத்தின் பெயரிலேயே நாட்டுப்பற்று நச்சென்று இருக்கிறது. அந்தப் பற்று சிறிதும் குறையாத வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளது. இயக்கியவர் ஷங்கர். கமல், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர்.

லஞ்சம் நாட்டில் எப்படி தலைவிரித்தாடுகிறது? அதை அடக்க இந்தியன் தாத்தா என்னவெல்லாம் செய்கிறார் என்பதைக் காட்டி லஞ்சம் வாங்குறதும் தப்பு…கொடுக்குறதும் தப்பு என்று நம்மிடம் ஒரு எழுச்சியை உண்டாக்கியிருக்கிறார் இயக்குனர். பாடல்கள் அனைத்தும் சூப்பர்.

ஜெய்ஹிந்த்

Jaihind movie

1994ல் வெளியான ஒரு உணர்ச்சிகரமான படம். ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்து இயக்கிய படம். வித்யாசாகர் இசை அமைத்துள்ளார்.

அர்ஜூனுடன் இணைந்து ரஞ்சிதா, கவுண்டமணி, மனோரமா, செந்தில், மேஜர் சுந்தரராஜன், சாருஹாசன், சந்திரசேகர் உள்பட பலர் நடித்துள்ளனர். போதை ஏறிப்போச்சு, கண்ணா என், முத்தம் தர, தண்ணி வச்சு, தாயின் மணிக்கொடி ஆகிய பாடல்கள் உள்ளன.

Republic day

அனைவருக்கும் இனிய 74வது குடியரசு தின நல்வாழ்த்துகள்

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

What do you think?

Mentor

Written by Cine Reporters

Content Author

Leave a Reply

GIPHY App Key not set. Please check settings

‘அனைவரின் நிலையையும் உயர்த்துதல்’ என்பது இன்னும் எஞ்சி இருக்கிறது: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை

பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு