எம்.ஜி.ஆரும் சிவாஜி கணேசனும் வணிக ரீதியாக போட்டி நடிகர்களாக இருந்தாலும், அவர்கள் இருவருக்குள்ளும் மிக நெருக்கமான உறவு இருந்தது. குறிப்பாக எம்.ஜி.ஆர், சிவாஜியை தனது சொந்த தம்பியாகவே பார்த்துவந்தாராம். அந்த அளவுக்கு சிவாஜியோடு மிக அன்பாக பழகியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

MGR and Sivaji Ganesan
இந்த நிலையில் ஒரு நாள் எம்.ஜி.ஆர் ராமாவரம் தோட்டத்தில் இருந்தபோது நடிகர் தேங்காய் சீனிவாசன் அவரை பார்க்க வந்திருந்தாராம். வந்தவர் எம்.ஜி.ஆரிடம் சிவாஜியை குறித்து மிகவும் மோசமாக பேசினாராம்.
அதாவது தேங்காய் சீனிவாசன் சிவாஜி கணேசனை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரித்திருந்தாராம். அத்திரைப்படம் சரியாக போகவில்லை என்பதால் தேங்காய் சீனிவாசனுக்கு 13 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாம். ஆதலால்தான் சிவாஜியை குறித்து மிக மோசமாக திட்டினாராம்.

Thengai Srinivasan
இதை கேட்டுக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர், “இங்க நிக்காத, தயவு செஞ்சி போய்டு” என தேங்காய் சீனிவாசனை விரட்டினாராம். தனது கஷ்டத்தில் எம்.ஜி.ஆர் பங்குகொள்வார் என்று நினைத்ததால்தான் எம்.ஜி.ஆரிடம் வந்து இது குறித்து பேசினாராம் தேங்காய் சீனிவாசன். ஆனால் எம்.ஜி.ஆர் இவ்வளவு கோபமாக விரட்டியவுடன் வேறு வழியில்லாமல் தனது வீட்டிற்கு சென்றுவிட்டாராம்.
அவர் தனது காரில் இருந்து இறங்கி வீட்டிற்குள் நுழையப்போகும் முன் ஒருவர் அவரை அழைக்க, திரும்பி பார்த்தார் தேங்காய் சீனிவாசன். அப்போது அந்த நபர் தேங்காய் சீனிவாசனின் கையில் ஒரு பெட்டியை தந்துவிட்டு எம்.ஜி.ஆர் உங்களிடம் கொடுக்கச் சொன்னார் என கூறிவிட்டு சென்றுவிட்டாராம். அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது உள்ளே 13 லட்ச ரூபாய் இருந்ததாம்.
இதையும் படிங்க: காதலிக்க நேரமில்லை படத்தில் நடிக்க இருந்த சூப்பர் ஸ்டாரின் தந்தை… இதை நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க!!

MGR
தனது சொந்த சகோதரரை போல் நினைக்கும் சிவாஜி கணேசனை இனி எந்த நொடியிலும் தேங்காய் சீனிவாசன் திட்டக்கூடாது என்ற காரணத்திற்காகத்தான் எம்.ஜி.ஆர், எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டதோ அவ்வளவு ரூபாயை கொடுத்தாராம். இந்த தகவலை மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
GIPHY App Key not set. Please check settings