புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் கடந்த டிசம்பர் 6-ம் தேதி பயணம் செய்த பெண் ஒருவரின் இருக்கையில் இருந்த போர்வை மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார். இது, ஏர் இந்தியா விமானத்தில் நடைபெற்ற 2-வது சம்பவமாகும்.
முன்னதாக, நவம்பர் 26-ம் தேதி நியூயார்க்-டெல்லி விமானத்தில் பெண் பயணியின் மீது சக ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் பொது வெளியில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது.இதையடுத்து, ஏர் இந்தியாவுக்குஅபராதம் விதிக்கப்பட்டதுடன், விமானியின் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பர் 6-ம் தேதி நடைபெற்ற மற்றொரு சிறுநீர்கழிப்பு சம்பவம் தொடர்பாக, விமானப் போக்குவரத்து அமைச்சகம் (டிஜிசிஏ) ஏர் இந்தியாவிடம் விளக்கம் கேட்ட பிறகே அது வெளிச்சத்துக்கு வந்தது. அதுவரையில், இந்த விவகாரம் குறித்து புகாரளிக்காமல் ஏர் இந்தியா மறைக்கும் நோக்கில் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, இந்த சம்பம் குறித்து தெரிவிக்காமல் இருந்ததற்காக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது.
GIPHY App Key not set. Please check settings