“வீரபாண்டிய கட்டபொம்மன்”, “கப்பலோட்டிய தமிழன்”, “ஆயிரத்தில் ஒருவன்” போன்ற பல கிளாசிக் திரைப்படங்களை இயக்கியவர் பி.ஆர்.பந்தலு. இவர் மிகப் பிரபலமான இயக்குனராக அறியப்பட்டிருந்தாலும் இவரது மகளான பி.ஆர்.விஜயலட்சுமியை சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திருக்கமாட்டார்கள்.

B.R.Panthulu
பி.ஆர்.பந்துலுவின் மூத்த மகளான பி.ஆர்.விஜயலட்சுமி இந்தியாவில் மட்டுமின்றி ஆசியாவிலேயே முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்ற பெருமையை பெற்றவர். இவர் பிரபல ஒளிப்பதிவாளரான அசோக்குமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

B.R.Vijayalakshmi
அதன் பின் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த பாக்யராஜ்ஜின் “சின்ன வீடு” திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து “அறுவடை நாள்”, “சிறைப் பறவை”, “தெக்கத்தி கள்ளன்”, “மல்லுவேட்டி மைனர்” போன்ற பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
மேலும் 1995 ஆம் ஆண்டு வெளியான “பாட்டு பாடவா” என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். அதே போல் “பாஸ்கட்” என்ற திரைப்படத்தையும் மலையாளத்தில் “அபியுடே கதை அணுவின்டேயும்” ஆகிய திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
இதையும் படிங்க: கமல்ஹாசனின் மார்க்கெட் எகிறியதால் இயக்குனருக்கு வந்த சோதனை… ஒரே மர்மமா இருக்கேப்பா!!

B.R.Vijayalakshmi
இவரை குறித்த மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய முதல் இயக்குனர் இவர்தான். மிகவும் புகழ்பெற்ற தமிழ் தொலைக்காட்சித் தொடர்களான “மாயா மச்சீந்திரா”, “வேலன்”, “ராஜ ராஜேஸ்வரி” போன்ற பிரபல சீரீயல்களை இயக்கியவர் விஜயலட்சுமிதான். இவ்வளவு பெருமைக்கும் சொந்தக்காரராக திகழ்ந்து வரும் பி.ஆர்.விஜயலட்சுமி தற்போது “சரீகமா” என்ற பிரபல ஆடியோ கம்பெனியின் கிரியேட்டிவ் ஹெட் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
GIPHY App Key not set. Please check settings