in

பொதுவாக இதைப் பற்றி பேசியதே கிடையாது…குடும்ப வன்முறையைப் பற்றி விளாசித் தள்ளியநடிகை ரோகிணிநடிகை ரோகிணி அடிக்கடி சமூக நலப்பிரச்சனைகளை அலசி ஆராய்வார். பல தடவை பெண்ணீயத்திற்காகக் குரல் கொடுத்துள்ளார்.

பெண்களின் வேதனையையும், வலியையும் மிகத் தெளிவாக விளக்கிப் பேசியுள்ளார். அந்த வகையில் அவரது தெளிவான பேச்சிலிருந்து சில பகுதிகள் உங்கள் பார்வைக்கு…

ஒரு பெண் புகுந்த வீட்டுக்குப் போனபிறகு சமைக்கத் தெரியவில்லை என்றால் சமைக்கக்கூடத் தெரியாதா? என்ன வளர்த்துருக்காங்க உங்க அம்மா? அதே மாதிரி பையனும் ஒண்ணும் தெரியாமல் இருந்தா என்ன வளர்த்துருக்காங்க உங்க அம்மான்னு தான் கேட்பாங்க. அதனால தாய் தான் நல்லா வளர்க்கிறாங்க.

அவங்களுக்குத் தான் அந்தப் பொறுப்பு இருக்கு. அப்படின்னா தந்தை என்ன செய்தார்? அவருக்கு வளர்ப்பில் எந்தப் பங்கும் கிடையாது. வகை வகையாக சமையல் செய்பவளாக புகுந்த வீட்டில் அந்தப் பெண் இருக்க வேண்டும்.

மாமனாருக்கு முன் மருமகள் உட்காரக்கூடாது என்ற நிலையில் தான் இன்று 90 சதவீத வீடுகளில் நடந்து கொண்டுள்ளது.

மாமனார், கணவர் சாப்பிடறதுக்கு முன்னாடி சாப்பிடக்கூடாது. கணவர் சாப்பிட்டு மிச்சம் வச்சா அதை சாப்பிடணும். அவளுக்குப் பிடிச்சதை அவள் செஞ்சிக்கறதுக்கான டைம் அவளுக்கு இருக்காது.

பொறந்ததுல இருந்தே அவளுக்கு என்ன என்ன மாதிரியான இடையூறுகள் இருக்கு? என்ன மாதிரியான படிப்பு வேணும்? என்ன மாதிரியான வாழ்க்கை வேணும்? கல்யாணம் வேணுமா? வேணாமான்னு தீர்மானிக்கிற உரிமை கூட ஒரு பெண்ணுக்கு எப்போதுமே தரப்படுறதில்ல. ஒரு குடும்பத்துக்குள்ள போனதுக்கு அப்புறமும் அவளுக்கு எதிரான வன்முறைகள் தொடருது.

ஒரு குடும்பம் அதை செயல்படுத்துகிறது என்றால் சமூகத்தில் அது அனுமதிக்கப்படுகிறது. ஆமோதிக்கப்படுகிறது. அதை ஏற்றுக்கொள்ளப் படுகிறது என்பது தான்.

Actress Rohini

தனக்கு எதிரான வன்முறைகள் நடந்து கொண்டு இருக்கும்போது ஒரு பெண்ணால பேசவே முடியாது. ஒரு நாலு செவத்துக்குள்ள வாழ்கிற வாழ்க்கை…இதுதான் உன்னோட வாழ்க்கை…இதற்காக எதையும் பொறுத்துக்கொள்ள வேண்டும்..உன்னுடைய குடும்பத்துக்காக… உன்னுடைய குழந்தைகளுக்காக…

புகுந்த வீட்டின் மரியாதையைக் காப்பாத்துகிற பெரிய பொறுப்பு அந்தப் பெண்ணின் தலையில் தான் இருக்கிறது. இதை எல்லாவற்றையும் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு பெரிய போராட்டமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறாள்.

ஒரு தடவை அவள் எதிர்த்து ஏதாவது பேசிவிட்டாள் என்றால் அதற்கு அப்புறம் அவளது வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும்? என்பது நம்ம எல்லோருக்கும் தெரிந்தது தான்.

நீ எப்படி சொல்லலாம்? சொல்லிட்டு வந்ததுக்கு அப்புறம் அவளுக்கு இருக்கிற நிலை என்ன? இவை அனைத்தும் உண்மைகள்.

இப்படிப்பட்ட ஒரு மனநிலையைத் தொடர்ந்து செயல்படுத்துகின்ற ஒரு சமூகத்தில், ஒரு வீட்டில் அங்குள்ள அனைவரின் மனசும், புரிதலும், வளர்க்கப்பட்ட விதமும், இதுதான் சரி என்று நம்பும் நம்பிக்கையையும் நாம உடைக்காமல் ஒரு குடும்ப வன்முறையை நம்மால தடுக்க முடியாது.

இப்போது நான் சொன்னதெல்லாம் எனது சொந்த அனுபவம். எனக்கு நடந்துருக்குற வன்முறையைப் பற்றி எனக்குப் பேசுவதற்கு இடமில்லாமல் இருந்தது. பேசுன உடனே அந்த வீட்டில் இருக்கறதுக்கு இடமில்லாமல் போனது.

Raguvaran, Rohini with their son

இதுவரை நான் பொதுவில் பேசுனது இல்லை. ஏன்னா அந்தக் குடும்பத்துக்கு அது மரியாதைக் குறைவு என்றதால். இன்னும் கட்டிக் காப்பாத்திக்கிட்டு இருந்துருக்கேன்கறதுதான் உண்மை.

இவர் நடிகர் ரகுவரனைத் திருமணம் செய்து 2004ல் விவாகரத்துப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தம்பதியினருக்கு ரிஷிவரன் என்ற ஒரு மகன் உள்ளார்.  தமிழ்ப்படங்களில் இவர் சிறந்த நடிப்பாற்றலைக் கொண்டவர். மகளிர் மட்டும் படத்தில் இவரது நடிப்பு செம மாஸ்.

What do you think?

Mentor

Written by Cinema Pettai

Content Author

Leave a Reply

GIPHY App Key not set. Please check settings

ஷ்ரத்தா கொலை வழக்கு | அஃப்தாபுக்கு எதிராக 6,629 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

கமலின் சூப்பர் ஹிட் படம்!. இந்தக் காட்சியில் கமலுக்கு பதில் நடித்த பாரதிராஜா.. இப்படியெல்லாம் பண்ண முடியுமா?..