சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மற்றும் நடிகருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பு காரணமாக காலமானார்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் எழுத்தாளருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். இதனை அவரின் மகன் கலைச்செல்வன் சமூக வலைத்தளங்களில் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனது தந்தை எழுத்தாளர், இயக்குநர், நடிகர் ஈ.ராமதாஸ் மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார். இறுதி சடங்குகள் 24/01/2023 காலை 11 மணி -மாலை 5 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற இருக்கிறது என்று வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
GIPHY App Key not set. Please check settings