கௌதம் கார்த்தி நடிக்கும் ‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியது. மொத்தப் படத்தையும் 40 நாட்களுக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் தக்‌ஷிண மூர்த்தி ராம்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்தி – சரத்குமார் இணைந்து நடிக்கும் படம் ‘கிரிமினல்’. பார்சா பிக்சர்ஸின் மீனாக்‌ஷி சுந்தரம், பிக் பிரிண்ட் பிக்சர்ஸுடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.
GIPHY App Key not set. Please check settings