கமல் நடிப்பில் வெளியான படம் ஒரு கைதியின் டைரி. இந்த படத்தில் கமல், ரேவதி, ராதா உட்பட பல நடிகர்கள் நடித்து பாரதிராஜா இயக்கி வெளியான படம். முதலில் டாப் டக்கர் என்ற பெயரில் கதை உருவாகியிருக்கிறது. ஆனால் சில காரணங்களால் அந்த கதை பிடிக்காமல் போகவே விழி பிதுங்கி இருந்தார் பாரதிராஜா.
அந்த சமயத்தில் தான் பாக்யராஜின் முதல் மனைவி இறந்து போக சோகத்தில் இருந்த பாக்யராஜ் தாமாக முன்வந்து பாரதிராஜாவிடம் என் மன நிலை மாறவேண்டும் அதனால் இந்த படத்தில் பணிபுரிகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதன் பின் பாரதிராஜா படத்தின் கதையை பாக்யராஜிடம் சொல்ல கேட்டதும் இந்த கதை கண்டிப்பாக வெற்றி பெறாது என்று ஓப்பனாகவே சொல்லியிருக்கிறார்.

kamal1
அதன் பின் சில பல மாற்றங்கள் செய்து படத்தை எடுத்திருக்கின்றனர். இதில் கமலின் கால்ஷீட் பிரச்சினை வேறு இருந்திருக்கிறது. ஒரு வழியாக படம் எல்லாம் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில் கடைசியாக க்ளைமாக்ஸ் காட்சி மட்டும் எடுக்க வேண்டியிருந்ததாம்.
இதையும் படிங்க : தனுஷ் செய்த காரியத்தால் பிரபல இயக்குனருக்கு வந்த சிக்கல்… இதெல்லாம் சினிமாவுல சகஜமப்பா!!
அப்போது இந்த படத்தில் ஒரு வயதான கமல், அப்புறம் இள வயது கமல் என இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். அதில் வயதான கமல் போர்ஷன்கள் எல்லாம் எடுத்தாகி விட்டதாம். இள வயது கமல் க்ளைமாக்ஸ் காட்சி மட்டும் மீதமிருக்க கமல் கால்ஷீட் காரணமாக எங்கேயோ மாட்டிக் கொண்டுவிட்டாராம். அடுத்த நாள் ரீ ரிக்கார்டிங் போக வேண்டியிருந்ததால் பாரதிராஜாவே கமல் மாதிரியே நடித்து எங்கு எங்கு நிற்க வேண்டுமோ அப்படியெல்லாம் நடித்து எடிட் பண்ணி ரீரிக்கார்டிங்கிற்கும் அனுப்பி விட்டாராம்.

kamal2
ரீரிக்கார்டிங் எல்லாம் முடிந்து சென்சாருக்கு போகும் நிலையில் கமல் வர பாரதிராஜா நடித்ததை போட்டு காண்பித்திருக்கிறார். அதே மெஷர்மெண்டில் கமலை நடிக்க வைத்து பாரதிராஜா நடித்த போர்ஷனை மட்டும் கட் பண்ணி தூக்கிவிட்டு கமல் நடித்ததை சொருகி சென்சாருக்கு அனுப்பியிருக்கிறார் பாரதிராஜா. இக்கட்டான நிலையிலும் பாரதிராஜாவின் இந்த முடிவு அனைவரையும் வியக்க வைத்தது என்று இயக்குனர் மனோஜ்குமார் கூறினார்.
GIPHY App Key not set. Please check settings