கேரளாவை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் நுழைந்து பல படங்களில் நடித்து கோலிவுட்டில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை பல நடிகைகள் உருவாக்கியுள்ளனர். நயன்தாரா, அமலாபால், நித்யா மேனன், லட்சுமி மேனன் என பல உதாரணங்கள் உண்டு.
இந்த வரிசையில் இணைந்திருப்பவர்தான் ஐஸ்வர்யா லட்சுமி, ஜகமே தந்திரம் படம் மூலம்தான் இவர் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானார். அதன்பின் சில படங்களில் நடித்தார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. இதன் இரண்டாம் பாகத்திலும் இவருக்கு மேலும் முக்கியத்துவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக இவர் நடித்த கட்டா குஸ்தி திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்துள்ளது. ஒருபக்கம், விதவிதமான உடைகளில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்கள வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், வித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து ஐஸ்வர்யா லட்சுமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
GIPHY App Key not set. Please check settings