சந்தானம் அடுத்து நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என பெயரிடப்பட்டுள்ளது.
‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் நடிக்கும் ‘கிக்’ படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. இந்தப் படத்தையடுத்து அவர் ‘டிக்கிலோனா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகியுடன் மீண்டும் கைக்கோக்கிறார். இந்தப் படத்தை பீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் தயாரிக்கிறார்.
ஷான் ரோல்டன் இசையமைக்கும் படத்திற்கு ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ‘விட்னஸ்’ பட இயக்குநர் தீபக் ஒளிப்பதிவு செய்கிறார். கவுண்டமணி செந்திலின் புகழ்பெற்ற நகைச்சுவை கதாபாத்திரமான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற பெயரை தலைப்பிட்டிருப்பதன் மூலம் படம் காமெடி ஜானரில் உருவாவது உறுதியாகியுள்ளது.
GIPHY App Key not set. Please check settings