பெங்களூரு: கர்நாடகாவில் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்காத நிலைில் 150 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை மஜத கட்சித் தலைவர் எச்.டி.குமாரசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பீஜாப்பூர் மாவட்டம் சிந்தகி தொகுதி வேட்பாளர் முன்னாள் ராணுவ வீரரான சிவானந்த பாட்டீல் (55) பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, கீழே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சிவானந்த பாட்டீல் உயிரிழந்தார்.
GIPHY App Key not set. Please check settings