‘காந்தாரா 2’ படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளரான ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகந்தூர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட படமான ‘காந்தாரா’ ரசிகர்களிடையே நல்ல வரேற்பை பெற்றது. ரூ.16 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.450 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக்குவித்தது. தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ப்லிம்ஸின் நிறுவனர் விஜய் கிரங்கந்தூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், “காந்தாரா 2 படத்திற்கான கதையை இயக்குநர் ரிஷப் ஷெட்டி எழுதி வருகிறார். இதற்காக தனது உதவியாளர்களுடன் கடலோர கர்நாடக பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தினார்.
காந்தாரா 2ல் காந்தாராவின் அடுத்த பகுதியாக அதாவது சீக்வலாக இல்லாமல், ப்ரீக்வலாக உருவாக உள்ளது. இதில் கிராம மக்களுக்கும் அரசனுக்கும் உள்ள பிரச்சினையாக உருவாக உள்ளது. அரசனை சுற்றியுள்ள நிலங்கலையும் மக்களையும் காப்பாற்ற இயற்கையுடன் போராடும் கதையாக இருக்கும்.
மழைக்காலங்களில் எடுக்க வேண்டிய தேவையுள்ளதால் ஜூன் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. பான் இந்தியப் படமாக அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியட திட்டமிட்டுள்ளோம்.
படத்தின் பட்ஜெட் மட்டுமே அதிகரித்துள்ளது. கதை கூறும் முறை, ஒளிப்பதிவு என அதே தரத்தில் இருக்கும். படத்தில் நடிப்பவர்கள் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும். அநேகமாக மிகப்பெரிய நடிகர்கள் இதில் இருக்கலாம். அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
GIPHY App Key not set. Please check settings