ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், முன்பதிவில் மட்டும் இதுவரை 2.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் வரும் ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ள இப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் 50-வது படமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரின் தமிழ் பதிப்பை நடிகர் விஜய் வெளியிட்டிருந்தார். அதற்காக நடிகர் விஜய்க்கு, ஷாருக்கான் நன்றியும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ‘பதான்’ படத்தின் முன்பதிவு நடைபெற்று பல்வேறு திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. தற்போது வரை உலகம் முழுக்க 2.5 லட்சம் டிக்கெட்டுகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் முதல் நாள் உலகம் முழுவதும் ரூ. 40 கோடி வரை வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. முதல் வாரத்தில் படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடி அளவில் வசூலிக்கும் என திரைப்பட வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.
GIPHY App Key not set. Please check settings