in

‘வாரிசு’ வெற்றி கொண்டாட்டத்தில் விஜய் – வைரலாகும் படங்கள்


‘வாரிசு’ படத்தின் வெற்றிக்கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘வாரிசு’. தமன் இசையமைத்திருந்த இப்படத்தை தில்ராஜூ தயாரித்திருந்தார். படத்தில், ராஷ்மிகா மந்தனா, ஷாம், பிரகாஷ்ராஜ், விடிவி கணேஷ், சரத்குமார், யோகிபாபு, எஸ்.ஜே.சூர்யா, ஜெயசுதா, கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வெளியாகி 7 நாட்களில் ரூ.210 கோடியை வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ‘வாரிசு’ படத்தின் வெற்றி கொண்டாட்டம் எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு கேக் ஊட்டினார். இதில்,விஜய்யுடன், இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு , இசையமைப்பாளர் தமன் , பாடலாசிரியரும், படத்தின் வசனகர்த்தாவான விவேக் மற்றும் நடிகர் ஷாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

வெற்றிக்கொண்டாட்ட புகைப்படங்களைக்காண: ‘வாரிசு’ வெற்றிக்கொண்டாட்டம் – ஆல்பம்

What do you think?

Hero

Written by Hindu Tamil

Content Author

Leave a Reply

GIPHY App Key not set. Please check settings

இளையராஜாவிற்கே டெஸ்டா?.. கடைசி நிமிடத்தில் ட்யூனை மாற்றச் சொன்ன தயாரிப்பாளர்.. நம்ம ஆளு போட்டாரு பாருங்க…

ஷாருக்கான் யார் என கேட்ட அசாம் முதல்வர் – தொலைபேசியில் அழைத்துப் பேசிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்