பதான்கோட்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை ஜம்மு காஷ்மீரை அடைந்துள்ளது. இந்த யாத்திரை நேற்று முன்தினம் பஞ்சாபில் நடைபெற்றபோது பதான்கோட் என்ற இடத்தில் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே பாஜகவின் குறிக்கோளாக உள்ளது. மக்கள் நலனுக்காக எதையும் சிந்திக்கவோ செயல்படுத்தவோ இல்லை.
ஆறு காங்கிரஸ் அரசுகளை அவர்கள் திருடிவிட்டனர். எங் களுக்கு உத்தரவு வழங்கிய 6 மாநிலங்களை அவர்கள் திருடினார்கள். அவர்களிடம் அதிகாரம் உள்ளது, மக்கள் காங்கிரஸை தேர்ந்தெடுத்த பிறகு அவர்கள் சதி செய்து எங்கள் கட்சியினரை அழைத்துச் சென்றனர். இந்திய ஒற்றுமை யாத்திரையில் பல்வேறு தரப்பை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் இணைகின்றனர். யாத்திரையின் வெற்றியை கண்டு பாஜக அஞ்சி நடுங்குகிறது.
மனுஸ்மிருதி அல்லது ஆர்எஸ்எஸ்ஸில் பெண்களுக்கு இடமில்லை. ஆப்கனில் பெண்களை படிக்கவிடாமல் தலிபான்கள் எப்படி அழுத்தம் கொடுக்கிறார்கள், அச்சுறுத்துகிறார்கள் என்பதை படித்தேன். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவும் அதையே செய்ய முயற்சிக்கின்றன. இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
GIPHY App Key not set. Please check settings