புதுடெல்லி: மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் இந்திய இளைஞர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
பெரும்பாலான இளைஞர்கள் ரஷ்யாவை மிகுந்த நட்பு நாடாகவும், அடுத்ததாக அமெரிக்காவை நட்புநாடாகவும், சீனா மற்றும் பாகிஸ்தானை எதிரிகளாகவும் பார்க்கின்றனர். ஆனால் நடுநிலை வகிக்கும் வகையில் வெளியுறவுக் கொள்கைகளை உருவாக்க இந்தியா முயற்சிக்கிறது. உக்ரை னையும், ஈரானையும், இந்தியர்கள் நடுநிலையாக பார்க்கின்றனர்.
உக்ரைன் போருக்கு ரஷ்யாதான் காரணம் என 38 சதவீத இந்தியர் கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், 26 சதவீத இந்தியர்கள் அமெரிக்காவையும், 18 சதவீதம் பேர் நேட்டோ நாடுகளையும் குற்றம் சாட்டுகின்றனர்.
சீனாவை மிகப் பெரிய அச்சுறுத்தலாக 43 சதவீத இந்தியர்கள் கருதுகின்றனர். ஜி-20 கூட்டங் களுக்கு இடையே இந்தியா-சீனா தலைவர்கள் பேச்சுவார்த்தை நடந்தாலும், சீனாவின் தாக்குதலுக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதனால் அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கமானாலும், 22 சதவீதம் பேர் சீனாவுக்கு அடுத்ததாக அமெரிக்காவை அச்சறுத்தலாக பார்க்கின்றனர்.
அமெரிக்கா – சீனா இடையே விரோதம் அதிகரிப்பதால், இந்தியா சிக்கலை சந்திக்க நேரிடும் என இந்தியர்கள் கவலைப்படலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
GIPHY App Key not set. Please check settings