நடிகை பிரியா பவானி சங்கர், ‘பணத்துக்காகத்தான் நடிக்க வந்தேன்’ என்று கூறியதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இது சமூகவலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளித்து அவர் வெளியிட்டுள்ளப் பதிவில் கூறியிருப்பதாவது:
‘மாப்ள சொம்பு கொடுத்தாதான் தாலி கட்டுவாராம்’ என்பது போல இருக்கிறது. நான்அப்படி சொல்லவே இல்லை.அதை நான் சொல்லி இருந்தாலும் அதில் என்னபெரிய தவறு என்று புரியவில்லை. நான் பணத்திற்காகத்தான் வேலைசெய்கிறேன். எல்லோரும் அதற்காகத்தான் வேலை செய்கிறார்கள். ஆனால், இது ஒரு நடிகரிடம் இருந்து வரும்போது ஏன் கீழ்த்தரமாகப் பார்க்கப்படுகிறது? இவ்வாறு கூறிஉள்ளார்.
GIPHY App Key not set. Please check settings