சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவருமான ரிக்கி பாண்டிங்கிற்கு இன்று பிறந்தநாள். அதை முன்னிட்டு அவரது ஃபேவரைட் கிரிக்கெட் ஷாட்டான ஃபுல் ஷாட்களை பகிர்ந்து அசத்தியுள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 168 டெஸ்ட், 375 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடி 27,483 ரன்கள் குவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை 2002 முதல் 2011 வரையில் கேப்டனாக வழி நடத்தி உள்ளார். 2004 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியை வழிநடத்தி உள்ளார். 2003 மற்றும் 2007 ஒருநாள் உலகக் கோப்பையை அவர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.
அவர் ஃபுல் ஷாட் ஆடுவதில் கைதேர்ந்தவர். அப்படியே பேட்டை லெக் திசையில் சுழற்றி அபாரமாக அந்த ஷாட்டை ஆடுவார். அதை நினைவுப்படுத்தும் வகையில் அவரது ஃபுல் ஷாட்களை கோர்வையாக கோர்த்து வீடியோவாக பகிர்ந்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.
சுமார் 20 நொடிகள் மட்டுமே இயங்கும் இந்த வீடியோ டெஸ்ட், ஒருநாள் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் என அனைத்தையும் சேர்த்துள்ளது. இது கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
GIPHY App Key not set. Please check settings