கத்தார்: உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி நிகழ்வில், கருப்பு நிற அங்கி ஒன்றை அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸிக்கு கத்தார் மன்னர் அணிவித்தது உலக அளவில் பேசும்பொருளானது.
ஃபிஃபா 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 36 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் அர்ஜென்டினா வாகை சூடியுள்ளது. அந்த அணி உலகக் கோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும். அர்ஜென்டினாவின் வெற்றியை உலக முழுவதிலும் உள்ள மெஸ்ஸி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings