மும்பை: பதான் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘ஜூம் ஜோ பதான்’ வரும் 22-ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ஷாருக் கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோர் ‘பதான்’ படத்தில் நடித்துள்ளனர். ஜனவரி 25-ம் தேதி படம் திரைக்கு வர உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘ஜூம் ஜோ பதான்’ வரும் 22-ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த பாடலின் ஃபர்ஸ்ட் லுக் இப்போது வெளியாகி உள்ளது.
ஆதித்ய சோப்ரா இந்த படத்தை தயாரித்துள்ளார். விஷால் – சேகர் இணைந்து படத்திற்கான இசையை அமைத்துள்ளனர். இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இந்தப் படம் வெளியாக உள்ளது.
பதான் படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பேஷரம் ரங்’ பாடலில் தீபிகா, காவி நிற பிகினியில் கவர்ச்சியாகவும், ஷாருக், பச்சை நிற ஆடை அணிந்தும் டூயட் பாடுகின்றனர். இதனால் காவி நிறம் அவமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மத்தியப் பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்தப் படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என பலரும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
Get set to dance with #JhoomeJoPathaan – the second BIG song from @iamsrk @deepikapadukone @johnabraham starrer #Pathaan that drops on Dec 22nd! Film releases only in theatres on 25th January, 2023 in Hindi, Tamil and Telugu. #SiddharthAnand @yrf pic.twitter.com/owIE6CJbGd
GIPHY App Key not set. Please check settings