சான் பிரான்சிஸ்கோ: எலான் மஸ்க் ட்விட்டர் நிறு வனத்தை கையகப்படுத்திய பிறகு2 மாதங்களாக சிஇஓ வாக செயல்பட்டு வருகிறார். நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஊழியர்கள் பணி நீக்கம் உட்பட அவர் எடுத்த பல முடிவுகள் உலகளவில் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில், ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பதவியில் தொடரலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து நேற்று முன்தினம் கருத்துக் கணிப்பு நடத்தினார் எலான் மஸ்க்.கருத்து கணிப்பு தொடங்கிய நான்கு மணி நேரத்தில் 90 லட்சம் பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
அதில், 57 சதவீதம் பேர் எலான் மஸ்க் சிஇஓ பதவியில் இருந்து வெளியேற வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து எலான் மஸ்க்கை பின்தொடர்பவர்கள் கூறும்போது, ‘‘ரஷ்யா – உக்ரைன் போரை எவ்வாறு தீர்ப்பது என்று கூட ஏற்கெனவே கருத்து கணிப்பு நடத்தி உள்ளார். எனவே, சிஇஓ பதவிக்கு ஏற்கெனவே ஒருவரை தேர்வு செய்து விட்டு அவர் இந்த கருத்து கணிப்பை நடத்துவது போலவே தெரிகிறது’’ என்று தெரிவித்துள்ளனர்.
GIPHY App Key not set. Please check settings