Last Updated:September 19, 2025 1:59 PM IST
கர்நாடகாவில் நடைபெற்ற வருடாந்திர விநாயகர் திருவிழா இந்த ஆண்டு மற்றொரு சாதனை படைத்த லட்டு ஏலத்தைக் கண்டது.
விநாயகர் சதுர்த்தி முடிந்துவிட்டாலும்கூட அடுத்தடுத்து பல பண்டிகைகள் வர காத்திருப்பதால் நாட்டின் பல பகுதி மக்கள் இன்னும் பண்டிகை மனநிலையில் உள்ளனர். கர்நாடகாவின் சிக்கபல்லாப்பூர் மாவட்டத்தில் உள்ள கௌரிபிதனூர், இந்த பண்டிகை சீசனில் மிகவும் உற்சாகமாக இருக்கும் பகுதியாகும்.
கௌரிபிதனூரில் நடைபெற்ற வருடாந்திர பைபாஸ் விநாயகர் திருவிழா இந்த ஆண்டு மற்றொரு சாதனை படைத்த லட்டு ஏலத்தைக் கண்டது. கொண்டாட்டங்களின்போது விநாயகர் சிலைக்கு படைக்கப்பட்ட 20 கிலோ லட்டு, மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போனது.
குறிப்பாக இங்கு நடைபெறும் கௌரி-விநாயகர் கொண்டாட்டங்கள் மிகவும் பிரபலமானவை. அந்த வகையில் நடப்பாண்டு உள்ளூர்வாசிகளும், ஏராளமான பக்தர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் அங்கு நடைபெற்ற விநாயகர் சிலை லட்டு ஏலம் புதிய உச்சத்தை எட்டியது. இந்த பாரம்பரியம் விநாயகர் சிலைக்கு வழங்கப்படும் ஒரு பெரிய லட்டை ஏலம் எடுப்பதை உள்ளடக்கியது. அதில் இருந்து கிடைக்கும் வருமானம் கோயில் மேம்பாடு மற்றும் சமூக திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
ஏலத்தில் பல லட்சம் ரூபாய்க்கு விலைக்குப் போன லட்டு சாதாரண பிரசாதம் அல்ல. 20 கிலோ எடையுள்ள விநாயகர் லட்டு, இது சிறப்புப் பிரசாதமாக தயாரிக்கப்பட்டு பக்தர்களை கவர்ந்தது. ஏலத்தன்று இரவில், குடும்பங்கள், கடைக்காரர்கள் மற்றும் விவசாயிகள் ஏலம் எடுக்க கூடிவந்ததால், அந்த பகுதி முழுவதும் மின்விளக்குகளால் மின்னியது. இந்த சிறப்பு லட்டை தொண்டேபாவி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணரெட்டி என்பவர் ரூ.4,10,000-க்கு ஏலத்தில் எடுத்தார்.
இந்த தொகை கடந்த ஆண்டு ரூ.1 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட நிலையில், அதைவிட நான்கு மடங்கு அதிகம். மேலும், இந்த ஏல நிகழ்வு ஸ்ரீ வித்யா கணபதி யுவகார பாலகாவால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஏலம் 22 ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. தற்போது 22 ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவில், 22 அடி உயர பிரணவ மகாருத்ர விநாயகர் சிலை இடம்பெற்றது, இது ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்த்தது மற்றும் ஒரு பிரமாண்டமான பண்டிகை சூழ்நிலையை உருவாக்கியது.
இதையும் படிங்க: இந்தியர்களுக்கு விருப்பமான சமோசா தடைசெய்யப்பட்டுள்ள நாடு எது தெரியுமா...? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க...
ஆன்மீக மற்றும் சமூக நிகழ்வாகக் கருதப்படும் லட்டு ஏலம், ஒவ்வொரு ஆண்டும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஆண்டுதோறும் இப்படி ஏலத்தில் வாங்கப்படும் லட்டானது அதை ஏலம் எடுத்தவர் வீட்டிற்கு ஆடிப்பாடி, மகிழ்ச்சியுடன் எடுத்துச் சென்று ஆசிர்வாதத்தின் அடையாளமாக, அண்டை வீட்டாருக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்வார்கள். இது குறித்து பேசிய உள்ளூர் பெரியவர்கள் சாதிகள் மற்றும் கிராமங்களை கடந்து மக்களை ஒன்றிணைத்து, ஒரு எளிய இனிப்பை நம்பிக்கை மற்றும் தாராள மனப்பான்மையின் பகிரப்பட்ட கொண்டாட்டமாக இந்த ஏலம் மாற்றுகிறது.
இதையும் படிங்க: இந்தியாவின் முதல் விமானப் பயணம் எந்த ஊரிலிருந்து தொடங்கியது தெரியுமா...? பதில் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க...
ஏலத்தில் எடுக்கப்பட்டுவரும் லட்டின் விலை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டேபோவது திருவிழாவின் பிரபலத்தை அதிகரிப்பது மட்டுமல்ல, கோயிலுக்கு மக்கள் செய்ய விரும்புவதையும் பிரதிபலிக்கிறது என்றனர். அதேபோல இந்த லட்டு ஏலத்தில் வெற்றி பெறுபவர்கள் தங்களது வாழ்க்கையில் நாளுக்கு நாள் எல்லா வகையிலும் முன்னேறுவார்கள் என்றும் நம்பிக்கை நிலவுவதால், சிறப்பு பிரசாத லட்டுவை பலரும் போட்டி போட்டு ஏலத்தில் எடுக்க முந்துவதாகவும் உள்ளூர்வாசிகள் கூறி உள்ளனர். பொதுவாக இதுபோன்ற மெகா லட்டு ஏலங்கள் தெலங்கானாவில் பிரபலமாக இருந்தாலும், கர்நாடகாவிலும் இது போன்ற நிகழ்வுகள் பல இடங்களில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :
September 19, 2025 1:59 PM IST