ரூ.14,903 கோடி உடன் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்ட விரிவாக்கம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

1 month ago 12

செய்திப்பிரிவு

Last Updated : 16 Aug, 2023 07:39 PM

Published : 16 Aug 2023 07:39 PM
Last Updated : 16 Aug 2023 07:39 PM

<?php // } ?>

புதுடெல்லி: ரூ.14,903 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்ட விரிவாக்கத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்: சிறப்புத்திறன் முதன்மைத் திட்டத்தின் கீழ் 6.25 லட்சம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மறுதிறன் மற்றும் மேம்பட்ட திறன் கொண்டவர்களாக மாற்றப்படுவார்கள்.

> தகவல் பாதுகாப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் 2.65 லட்சம் பேருக்குத் தகவல் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

> புதுயுக ஆளுமைக்கான ஒருங்கிணைந்த மொபைல் பயன்பாடு (உமாங்) பயன்பாடு / திட்டத்தின் கீழ் உள்ள செயலி /இணையதளம் 540 கூடுதல் சேவைகளுக்குக் கிடைக்கும். 1,700 க்கும் அதிகமான சேவைகள் உமாங்கில் ஏற்கனவே கிடைக்கின்றன.

> தேசிய சூப்பர் கணினி இயக்கத்தின் கீழ் மேலும் 9 சூப்பர் கம்ப்யூட்டர்கள் சேர்க்கப்படும். ஏற்கெனவே 18 சூப்பர் கணினிகள் பயன்பாட்டில் உள்ளன.

> செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் பல மொழிகளின் மொழிபெயர்ப்பு கருவியான பாஷினி 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். தற்போது 10 மொழிகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது.

> 1,787 கல்வி நிறுவனங்களை இணைக்கும் தேசிய அறிவு வலையமைப்பு நவீனமாக்கப்படும்.

> டிஜிலாக்கர் மூலமான டிஜிட்டல் ஆவண சரிபார்ப்பு வசதி இனி எம்.எஸ்.எம்.இ மற்றும் பிற நிறுவனங்களுக்கும் கிடைக்கும்.

> 2 ஆம் மற்றும் 3-ஆம் நிலை நகரங்களில் 1,200 ஸ்டார்ட்-அப்-களுக்கு உதவி அளிக்கப்படும்.

> சுகாதாரம், விவசாயம் மற்றும் மாற்றத்தை ஏற்றுத் தாங்கவல்ல நகரங்கள் குறித்த செயற்கை நுண்ணறிவின் மூன்று சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்.

> 12 கோடி கல்லூரி மாணவர்களுக்கு சைபர் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படும்.

> கருவிகளை உருவாக்குதல், தேசிய சைபர் ஒருங்கிணைப்பு மையத்துடன் 200-க்கும் அதிகமான தளங்களை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட சைபர் பாதுகாப்புத் துறையில் புதிய முன்முயற்சிகள்

> இன்றைய அறிவிப்பு இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும், சேவைகளுக்கான டிஜிட்டல் அணுகலை ஊக்குவிக்கும், இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு சூழல் அமைப்புக்கு உதவும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

Read Entire Article