பங்குச்சந்தை | சென்செக்ஸ் 127 புள்ளிகள் சரிவு

1 month ago 12

செய்திப்பிரிவு

Last Updated : 16 Aug, 2023 10:41 AM

Published : 16 Aug 2023 10:41 AM
Last Updated : 16 Aug 2023 10:41 AM

<?php // } ?>

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் புதன்கிழமை சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 285 புள்ளிகள் சரிவடைந்து 65,116 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 100 புள்ளிகள் சரிந்து 19,334 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்று வீழ்ச்சியுடன் காலை 10:16 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 127.15 புள்ளிகள் சரிவடைந்து 65274.77 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 56.60 புள்ளிகள் சரிந்து 19377.95 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் பலவீனமான சூழல், கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு, நிதி மற்றும் வங்கிப் பங்குகளின் சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் புதன்கிழமை வர்த்தகத்தை வீழ்ச்சியுடனேயே தொடங்கின. தகவல் தொழில்நுட்ப பங்குகளின் ஏற்றம் வீழ்ச்சியை மட்டுப்படுத்தியது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை இன்போசிஸ், ஐடிசி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மகேந்திரா, விப்ரோ, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், என்டிபிசி, எல் அண்ட் டி பங்குகள் உயர்வில் இருந்தன.

இன்டஸ் இன்ட் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பாரதி ஏர்டெல், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், கோடாக் மகேந்திரா பேங்க், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எம் அண்ட் எம், பவர் கிரிடு கார்ப்பரேஷன், டிசிஎஸ், மாருதி சுசூகி, சன்பார்மா இன்ட்ஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா பங்குகள் சரிவில் இருந்தன.

தவறவிடாதீர்!

Read Entire Article